அத்திமலைத் தேவன் பாகம் 1

அத்திமலைத் தேவன் பாகம் 1, காலச்சக்கரம் நரசிம்மா, வானதி பதிப்பகம், விலை 425ரூ. அத்தி வரதர் வரலாறு என்ன? 40 ஆண்டுகளாக, ஏன் தண்ணீருக்குள் இருக்கிறார்? என, ‘காலச்சக்கரம்’ நரசிம்மா, 40 ஆண்டுகளாக திரட்டிய ஆய்வறிக்கை, சுவைபட, சுவாரஸ்யம் குன்றாமல், ‘அத்திமலைத் தேவன்’ என்ற நாவலாக வெளிவந்திருக்கிறது. கோவில்கள் நகரமான காஞ்சியில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலின், ஆனந்த புஷ்கரணியில் இருந்து, அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளி, பக்தர்களுக்கு […]

Read more

பஞ்ச நாராயண கோட்டம்

பஞ்ச நாராயண கோட்டம், காலச்சக்கரம் நரசிம்மா, வானதி பதிப்பகம், பக். 720, விலை 300ரூ. சமண சமயத்தின் கேந்திரமான ஹொய்சாள சாம்ராஜ்யம், வைணவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, அங்கு அழகு வாய்ந்த பஞ்ச நாராயண கோட்டங்கள் உருவாக்கப்பட்டதை கோவையாகச் சித்திரிக்கிறது இந்த நாவல். குலோத்துங்க சோழனின் சைவ வேட்கைக்கு அடிபணியாது, வைணவ ஆச்சார்யார் ராமானுஜர், திருவரங்கத்திலிருந்து ஹொய்சாளத்தில் அடைக்கலம் புகுந்தார். அங்கு சமண மன்னரான பிட்டி தேவனின் மகளான வசந்திகாவைப் பிடித்திருந்த பேயை விரட்டி நோயை விரட்டியதால், வைணவத்தைத் தழுவினான் பிட்டிதேவன். தனது பெயரையும் விஷ்ணுவர்த்தனன் என […]

Read more

பிரபஞ்சம் தோன்றிய வரலாறு

பிரபஞ்சம் தோன்றிய வரலாறு, பெ. ஹரி கிருஷ்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 134, விலை 55ரூ. பல நட்சத்திரக் குடும்பங்கள் அடங்கியது காலக்ஸி, பல காலக்ஸீஸ் கொண்டது பிரபஞ்சம். இருண்ட வெளியல் சிதறிக் கிடக்கும், வான் துகள்களிலிருந்து இறைவன் உருவாக்கியது. பிரபஞ்சம் என்பது ஆசிரியரின் வாதம், ஒவ்வொரு மதத்திலும், இறைவனுக்கு ஒவ்வொரு பெயர் சொல்லி அழைக்கின்றனர். இந்து மதத்தில் சிவம் என்றும், பரமாத்மா என்றும் அழைக்கின்றனர். இந்தப் புத்தகத்தில் ஆத்மாவை மையப்படுத்தி, ஆசிரியர் இறைவனை உணர்த்தியிருக்கிறார். ஆன்மிகத் […]

Read more