சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், போபால், விலை 295ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-227-7.html
ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி? இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம். (இவர் பிரபல நாடக மேதைகளான டி.கே.ஆஸ். சகோதரர்களில் ஒருவரான டி.கே. முத்துசாமியின் பேத்தி ஆவார்.) வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 2/4/204.
—-
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி சகஸ்ர நாமாவளி, அஷ்டோத்ர சத நாமாவளி, சுப்ரமணிய சிவாச்சாரியர், ஆர்ய வைஸ்ய சமூகம், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சத்தியமங்கலம், பக். 70, விலை 30ரூ.
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி சகஸ்ர நாமாவளியின் அஷ்டோத்ர சத நாமாவளியை க்ரந்தமாகவும் அழகுத் தமிழிலுமாகத் தந்துள்ளார் நூலாசிரியர். அத்துடன் அம்பிகையைக் கொண்டாடுகிற ஏழு பாடல்கள் கொண்ட சி.டி.யையும் புத்தகத்துடன் தந்துள்ள விதம் சிறப்பு. படிக்கவும் கேட்கவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி: சக்தி விகடன், 22/1/13.