தமிழை நன்றாக எழுதுவோம்

தமிழை நன்றாக எழுதுவோம், பேராசிரியர் வே.சங்கர், நன்மொழிப் பதிப்பகம், விலை 150ரூ. தமிழை எழுதும்போது பலருக்கும் சாதாரணமாக ஏற்படக்கூடிய பிழைகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதற்கான வழிகாட்டி நூலாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. பொதுவாக எப்படிப்பட்ட பிழைகள் நேருகின்றன என்பதை விளக்கி, அந்தப் பிழைகளை எவ்வாறு சரி செய்து, நல்ல தமிழில் எழுத வேண்டும் என்பதை அருகில் இருந்து ஒருவர் சொல்லிக் கொடுக்கும் வண்ணம் ஆசிரியர் இந்த நூலை எழுதி இருக்கிறார். சந்திப் பிழை இல்லாமல் எழுதுவது, பேச்சு வழக்கு சொற்களை தவிர்த்து எழுதுவது, […]

Read more

1001 இரவு அரபுக் கதைகள்

1001 இரவு அரபுக் கதைகள், தொகுப்பு ஏ.சோதி, நன்மொழிப் பதிப்பகம், விலை 500ரூ. யார் எழுதினார்கள் என்பதே தெரியாத, மிகப் பழங்காலக் கதைகளின் தொகுப்புதான் 1001 இரவு அரபுக் கதைகள். வீர சாகசம், மாயமந்திரம், காதல், நன்னெறி, நகைச்சுவை என்று பலதரப்பட்ட குணநலன்களை உள்ளடக்கிய, படிக்கப் படிக்கத் தெவிட்டாத கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் ஏ.சோதி, தனக்கே உரிய பாணியில் மிக எளிய முறையில் தொகுத்துத் தந்துள்ள இந்தக் கதைகள், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை. […]

Read more

அறிவும் பகுத்தறிவும்

அறிவும் பகுத்தறிவும், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, விலை 30ரூ. அறிவுத் தொடர்பான 6 கதைகளும், பகுத்தறிவுத் தொடர்பாக 6 கதைகள் அடங்கிய நூல். ஓவியங்களுடன் சிறுவர்களுக்கு பயனுள்ள வகையில் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி.   —- காலம் வெளி மற்றும் ஒரு பறவையின் துடுப்புகள், தேவரசிகன், தமிழாசை பதிப்பகம், திருபுவனம், விலை 80ரூ. வித்தியாசமான தலைப்பில், எளிமையான உணர்வுகளைப் பேசுகிற பாசாங்கற்ற பல நல்ல கவிதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி.

Read more

சுந்தர வால்மீகி ராமாயணம்

சுந்தர வால்மீகி ராமாயணம், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 450ரூ. ராமாயணம், பாரத தேசத்தின் தலைசிறந்த இதிகாசங்களில் ஒன்று. ராமாயணம்தானே, எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனலாம். ஆனால் இந்நூல் முழுமையையும் படித்து முடித்தால், ராமாயண நிகழ்வுகளுக்கு இத்தனை அர்த்தங்கள் உள்ளனவா, நிகழ்வுகளுக்குள் இத்துணை சூட்சுமங்களும், ரகசியங்களும் உள்ளனவா என்று அதிசயிக்கத் தோன்றும். ராமஜென்ப பூமியான அயோத்தியில் துவங்கி, சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்த அசோக வனம் வரையில் உள்ள பெரும்பாலான ராமாயண நிகழ்விடங்களுக்குச் சென்று அந்தந்த சேத்ரங்களில் அந்தந்த தலங்களில், அந்தந்த தீர்த்தங்களில், அந்தந்த […]

Read more

கதைகள் வழி கொன்றை வேந்தன்

கதைகள் வழி கொன்றை வேந்தன், பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, பக். 80, விலை 50ரூ. ஔவையாரின் கொன்றை வேந்தன் என்ற நீதி நூலின் வழி நின்று 16 கதைகளை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். கதைகள் வழியாக அறிவுரைகளைச் சொன்னால் சிறுவர், சிறுமியர் மனங்களில் கதையும் கருத்தும் பதியும். அவர்கள் நல்வழியில் நடக்கத் தூண்டுதலாக அமையும் என்ற நூலாசிரியரின் எண்ணம் ஈடேறியுள்ளது. கொன்றை வேந்தனில் வரும் அறிவுரைகளையே கதைகளுக்குத் தலைப்பாக வழங்கியிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.   —- குறையொன்றுமில்லை, கவிஞர் […]

Read more

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர் சா. கந்தசாமி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 240, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-0.html தமிழ் இலக்கிய வாசகர்கள் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர் க.நா.சு. அவர் எழுதிய தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த 24 சிறுகதைகளின் தொகுப்பு இது. க.நா.சு. மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக அவர் எழுதிய எல்லாக் கதைகளும் சிறந்தவையாக இருந்தாக வேண்டிய கட்டாயமும் இல்லை. […]

Read more

காவல் புலன் விசாரணை

காவல் புலன் விசாரணை, வீ. சித்தண்ணன், ஜெய்வின் பதிப்பகம், 4/391, ஏ, ராம்தோட்டம், அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை 41, விலை ஒரு பாகம் 500ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-306-8.html குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது, நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்ற உயரிய எண்ணத்தை மையமாக வைத்து காவல் புலன்விசாரணை அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் என்ற தலைப்பில் 1034 பக்கங்களுடன் 25 தலைப்பகளில் 2 பாகம் கொண்ட நூலை வீ. சித்தண்ணன் எழுதி உள்ளார். இவர் 35 ஆண்டுகள் காவல் துறையில் […]

Read more

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, விலை 200ரூ. பாரத நாட்டில் 1975 ஜுன் 25ந்தேதி நள்ளிரவு தொடங்கி 1977 மார்ச் 21ந்தேதி காலையில் முடிவடைந்த நெருக்கடிநிலையின் போது நடந்த போராட்டத்தை விவரிக்கும் வரலாற்று நூல். நெருக்கடி நிலை அமுலாக்கப்பட்டது சுதந்திர பாரதத்தின் இருண்ட காலம். அடக்கு முறைக்கு எல்லையே இல்லாமல் இருந்து வந்த காலம் என்று வர்ணிக்கப்பட்டது. நாட்டில் புரட்சி பற்றி பேசியும், எழுதியும் வந்த கட்சிகள் இந்திரா காந்தியின் […]

Read more

மொழித்திறன்

மொழித்திறன், முனைவர் வே. சங்கர், நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி – 3, பக். 224, விலை 120ரூ. தமிழ் மொழியில் தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பேச்சில், எழுத்தில் வரும் பிழைகளும், அவற்றை நீக்கும் முறைகளும், கடிதம், கட்டுரை, கவிதை, மொழி பெயர்ப்பு, செய்திகள் அனுப்பல் என்று 30 தலைப்புகளில் பிழையற எழுதும் திறனை வளர்க்கிறது இந்நூல். இதிலுள்ள, சில பழைய தேர்வு முறைகள் இன்று நீக்கப்பட்டுவிட்டன. உதாரணமாக, சுருக்கி வரைதல் தரப்படுவதில்லை. […]

Read more