காவல் புலன் விசாரணை
காவல் புலன் விசாரணை, வீ. சித்தண்ணன், ஜெய்வின் பதிப்பகம், 4/391, ஏ, ராம்தோட்டம், அண்ணாசாலை, பாலவாக்கம், சென்னை 41, விலை ஒரு பாகம் 500ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-306-8.html
குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பக்கூடாது, நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்ற உயரிய எண்ணத்தை மையமாக வைத்து காவல் புலன்விசாரணை அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் என்ற தலைப்பில் 1034 பக்கங்களுடன் 25 தலைப்பகளில் 2 பாகம் கொண்ட நூலை வீ. சித்தண்ணன் எழுதி உள்ளார். இவர் 35 ஆண்டுகள் காவல் துறையில் உயர் பதவிகளை வசித்து தற்போது சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நூலில் கடந்த 47 ஆண்டுகளாக நீதி மன்றங்கள் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும். அதேபோல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றவிசாரணையில் எவ்வாறு செயல்படுவது, புகார் தர வருபவர்களை மரியாதையுடன் அக்கறையுடனும் நடத்த வேண்டும். மாறாக அலைக்கழிக்கக் கூடாது என்பதையும் தெளிவுப்படுத்தி உள்ளார். காவல் துறையில் பணிக்கு சேர்பவர்களும், பணியில் இருப்பவர்களும் மட்டுமல்லாது நீதித்துறை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்த நூல் ஒரு வழிகாட்டி நூலாக அமையும். நன்றி: தினத்தந்தி, 19/6/13.
—-
மொழித்திறன், வே. சங்கர், நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி 3, விலை 120ரூ.
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் மொழியில் திறன்பட திறமையை வளர்த்துக் கொள்வதற்காக எழுதப்பட்ட நூல் மொழித்திறன், இதனை பேராசிரியரும், ஜோதிடருமான முனைவர் வே. சங்கர் எழுதியுள்ளார். இந்த நூலைப் படித்த பிறகு எதை எப்படி எழுதுவது, குழப்பம் இல்லாமல் மொழித்திறனை வளர்த்துக்கொண்டு தெளிவாகவும், விரைவாகவும் எளிமையாகவும் அனைவராலும் சிறுகதைகள், கட்டுரைகள், உரையாடல்கள், அறிக்கைகள் எழுத இயலும் என்பதுடன் போட்டித் தேர்வுகளையும் வெற்றியுடன் சந்திக்க முடியும் என்பதை நூலாசிரியர் தெளிவாக கூறி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 29/5/13.
