கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா

கம்யூனிஸத்திற்குபின் ரஷ்யா, நடிகர் ராஜேஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-157-7.html

நடிகர் ராஜேஷ் தனது ரஷிய பயணத்தின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நூலாக தொகுத்துள்ளார். இந்த நூலை படிக்கும்போது ரஷியாவுக்கு சென்று வந்த உணர்வு ஏற்படுகிறது. சோவியத் ரஷியா 22 குட்டி நாடுகளாக பிரிந்ததும், அதனால் கம்யூனிசம் பலியான சம்பவங்களும் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இன்றைய ரஷியாவின் பண்பாடு, கலாசாரம், விலைவாசி உள்ளிட்டவற்றையும், இந்தியா ரஷியா இடையேயான தொடர்புகள் ஆகியவற்றையும் ஆசிரியர் பல்வேறு தலைப்புகளுடன் விளக்கியுள்ளார்.  

—-

 

காயிதே ஆலம் முகமது அலி ஜின்னா, டி. ஞானையா, அன்னை முத்தமிழ் பதிப்பகம், 96, பெரியார் சாலை, பாலவாக்கம், சென்னை 41, விலை 175ரூ.

ஜின்னாவின் வாழ்க்கையும், அவருடைய அரசியல் பரிணாம வளர்ச்சியும் சுவைபட தரப்பட்டுள்ளன. அவருக்கும், காந்தி, நேரு மற்றும் காங்கிரசுக்கும் உள்ள தொடர்புகளையும், உண்மை நிகழ்வுகளையும் எழுதியுள்ளார்.  

—-

 

பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள், பி. எல். முத்துக்குமரன், முல்லை பதிப்பகம், 323-10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40,விலை 35ரூ.

உலகப் புகழ் பெற்ற மேதை பெர்னார்ட்ஷாவின் பொன்மொழிகள் மட்டுமின்றி, அவர் வாழ்க்கையில் நடந்த 150 நிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. படித்து ரசிக்க பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/6/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *