அண்டமும் ஆன்மீகமும்
அண்டமும் ஆன்மீகமும், பி. ஆர். வெங்கட்ராஜு, சாகித் பப்ளிகேஷன்ஸ்.
அண்டத்திலும், ஆன்மீகத்திலும் புதைந்து கிடக்கும் புரியாத புதிர்களை, தர்க்க ரீதியில் கோர்வையாகப் புரிய வைக்க ஆசிரியர் எடுத்துள்ள முயற்சியைப் பாராட்டியிருக்கிறார், சுவாமி விமூர்த்தானந்தாஜி, ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம். இந்த நூல் அறிவியலையும், ஆன்மீகத்தையும் அற்புதமாகத் தொடர்புபடுத்தி சில மேற்கோள்களையும் சில தகவல்களையும் நம் பார்வைக்குக் கொண்டு வரும். ஆசிரியரின் பணி வியக்க வைக்கிறது. சுவாமி விமுர்த்தானந்தாஜியின் பாராட்டு மெத்தச் சரியே. வியப்பூட்டும் விஞ்ஞானம், இந்நூலில் அதி அற்புதமான மெஞ்ஞானத்துடன் கைகோர்த்துக் கொண்டு நம்மை வாசிக்கத் தூண்டுகிறது. நன்றி: தினமலர் 09/6/13.
—-
ப்ரேம்சந்த கதைகள், லதா ராமகிருஷ்ணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 302, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-009-7.html
பள்ளி ஆசிரியை பணியை விட்டுவிட்டு விடுதலைப் போராட்ட வீரராக தம் இலக்கியங்கள் மூலம் ஏழை எளிய மக்களின் நலவாழ்வையும், நாட்டுப்பற்றையும் வலுவூட்டிய ப்ரேம்சந்த் எழுதிய இச்சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு படிப்பினையைப் பதிவாக்கியுள்ளது. கடனை மிஞ்சிய வட்டியின் கொடுமையை, கையளவு கோதுமையிலும், குடிப்பழக்கம் நாட்டுக்கு நன்மை செய்யாது என்பதை, சதுரங்க ஆட்டக்காரர்கள் கதையிலும் இப்படி ஒவ்வொன்றும் ஒரு கருவை மையமாகக் கொண்டது. கலையின் நயங்கள், நளினங்கள் என்று சொல்லப்படுபவையெல்லாம், அவரால் புறந்தள்ளப்பட்டபோதிலும், அவர் சுட்டும் வறுமையும், துயரமும், மிகுந்த வீச்சோடு நம்மைக் கவரக் கூடியவை. இலக்கிய முன்னோடி என்பதால், அவரது நடைக்கும், எழுத்துக்கும் என்றும் பெருமை உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட இச்சிறுகதைகள் ஆங்கிலம் மூலம் மொழி பெயர்க்கப்பட்டவை. -பின்னலூரான். நன்றி: தினமலர் 09/6/13.
