புத்தகம் பற்றிய புத்தகம்

புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்சியல் பப்ளிகேஷன்ஸ், 167ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, கணேசபுரம், ஒலம்பஸ், ராமநாதபுரம், கோயம்புத்தூர் 641045, விலை 275ரூ. புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் புத்தகம் பற்றியே ஒரு புத்தகமா என்று வியப்படையத்தோன்றும். புத்தகம் பற்றி அப்படி என்ன அபூர்வமான தகவல்களைக் கூறிவிடப் போகிறார்கள்? என்று பலர் நினைக்கவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் புத்தகங்கள் பற்றி பல அபூர்வமான தகவல்கள் இந்நூலில்உள்ளன. ஆரம்ப காலத்தில் ஒரு புத்தகத்துக்கு வெறும் 200 பிரதிகள்தான் அச்சிட்டார்கள். அதை விற்பதற்கே ரொம்பவும் சிரமப்பட்டார்கள். இப்போது […]

Read more

திருத்தொண்டர்கள்

திருத்தொண்டர்கள் (63 நாயன்மார் வரலாறு), வீ. தமிழ்ச் சேரனார், தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 256, விலை 120ரூ. சைவ சமயத்தின் ஒப்பற்ற கருவூலமாக விளங்கும் பன்னிரு திருமுறை வரிசையில் பன்னிரண்டாவது திருமுறையாக வைத்துப் போற்றப்படுவது பெரியபுராணம். தெய்வச் சேக்கிழார் அருளிய அப்பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு, 63 மூன்று நாயன்மார்களின் அருள் வரலாற்றை விரித்துரைக்கிறது இந்நூல். நாயன்மார்கள் பிறந்த ஊர், குலம் அவர்களுடைய சிவ பக்தியின் ஆழம், இறைவன் அவர்களைத் தடுத்தாட்கொண்டவிதம் எல்லாமே சுவைபட எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக மானக்கஞ்சாற […]

Read more

மொழித்திறன்

மொழித்திறன், முனைவர் வே. சங்கர், நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி – 3, பக். 224, விலை 120ரூ. தமிழ் மொழியில் தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பேச்சில், எழுத்தில் வரும் பிழைகளும், அவற்றை நீக்கும் முறைகளும், கடிதம், கட்டுரை, கவிதை, மொழி பெயர்ப்பு, செய்திகள் அனுப்பல் என்று 30 தலைப்புகளில் பிழையற எழுதும் திறனை வளர்க்கிறது இந்நூல். இதிலுள்ள, சில பழைய தேர்வு முறைகள் இன்று நீக்கப்பட்டுவிட்டன. உதாரணமாக, சுருக்கி வரைதல் தரப்படுவதில்லை. […]

Read more