புத்தகம் பற்றிய புத்தகம்

புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்சியல் பப்ளிகேஷன்ஸ், 167ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, கணேசபுரம், ஒலம்பஸ், ராமநாதபுரம், கோயம்புத்தூர் 641045, விலை 275ரூ.

புத்தகத்தின் தலைப்பைப் பார்த்ததும் புத்தகம் பற்றியே ஒரு புத்தகமா என்று வியப்படையத்தோன்றும். புத்தகம் பற்றி அப்படி என்ன அபூர்வமான தகவல்களைக் கூறிவிடப் போகிறார்கள்? என்று பலர் நினைக்கவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் புத்தகங்கள் பற்றி பல அபூர்வமான தகவல்கள் இந்நூலில்உள்ளன. ஆரம்ப காலத்தில் ஒரு புத்தகத்துக்கு வெறும் 200 பிரதிகள்தான் அச்சிட்டார்கள். அதை விற்பதற்கே ரொம்பவும் சிரமப்பட்டார்கள். இப்போது லட்சணக்கான பிரதிகள் அச்சிடும் அளவுக்கு பதிப்புத்துறை வளர்ந்துள்ளது. ஒரு புத்தகம் அச்சிடப்படுவதில் இருந்து அது புத்தகமாகி, விற்பனைக்குச் செல்வது வரையுள்ள பிரச்சினைகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. பதிப்புரிமை, காப்புரிமை பற்றிய பயனுள்ள விவரங்களும் உள்ளன. எழுத்தாளர், பதிப்பாளர்கள் அனைவருக்குமே பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி  

—-

 

ஆஹா 50, குட்டி குட்டி ஓஹோ டிப்ஸ், கல்கி பதிப்பகம், கல்கி பில்டிங்ஸ், 47, என். பி. ஜவகர்லால் நேரு சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை ஒவ்வொரு பாகமும் 40ரூ.

சமையல் அறை, பூஜை அறை மற்றும் பெண்களுக்கான சிறு சிறு துணுக்குகள் அடங்கிய நூல். இரு பாகங்களாக வெளியிட்டுள்ளது.  

—-

 

குழந்தைகளுக்கு பரமார்த்த குரு கதைகள், பாலமுருகன், சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, சென்னை 49, விலை 65ரூ.

சிறுவர்களுக்கு எப்போதுமே பிடித்த பரமார்த்த குருவின் கதை கொஞ்சம் விரிவான கதைப்பின்னணியில் நூல் வடிவம் பெற்றிருக்கிறது. பெரியவர்களுக்கும் சிரிப்போடு பொழுது போகும். நன்றி; தினத்தந்தி

Leave a Reply

Your email address will not be published.