தமிழை நன்றாக எழுதுவோம்
தமிழை நன்றாக எழுதுவோம், பேராசிரியர் வே.சங்கர், நன்மொழிப் பதிப்பகம், விலை 150ரூ.
தமிழை எழுதும்போது பலருக்கும் சாதாரணமாக ஏற்படக்கூடிய பிழைகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதற்கான வழிகாட்டி நூலாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. பொதுவாக எப்படிப்பட்ட பிழைகள் நேருகின்றன என்பதை விளக்கி, அந்தப் பிழைகளை எவ்வாறு சரி செய்து, நல்ல தமிழில் எழுத வேண்டும் என்பதை அருகில் இருந்து ஒருவர் சொல்லிக் கொடுக்கும் வண்ணம் ஆசிரியர் இந்த நூலை எழுதி இருக்கிறார்.
சந்திப் பிழை இல்லாமல் எழுதுவது, பேச்சு வழக்கு சொற்களை தவிர்த்து எழுதுவது, நிறுத்தக் குறியீடுகள் மற்றும் காற்புள்ளி அரைப்புள்ளி, முக்காற்புள்ளி ஆகியவற்றின் அவசியம், அவற்றைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றோடு, பலவிதமான கடிதங்கள் எழுதும் முறை ஆகியவையும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி,19-2-20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818