உன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்
உன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலைரூ.190
பக்தி பெருக்கெடுத்து ஓடும் வைணவத் தலங்களில், சிறந்த கிருஷ்ணர் கோவில் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரும், கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுபியும் தான். உடுபி கிருஷ்ணரை பலர் தரிசித்திருக்கலாம். எனினும், கோவில் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த குறையை போக்கும் வகையில், உடுபி கிருஷ்ணர் பற்றி மிக விரிவாக, தெளிவாக ஆசிரியர் எழுதியுள்ளது பிரமிக்க வைக்கிறது. இந்த புத்தகத்தை படித்தால், உடுபி கோவிலுக்கு சென்று கிருஷ்ணரை தரிசித்த உணர்வு நிச்சயம் ஏற்படும்.
கோவில் வரலாறு, உடுபி கிருஷ்ணரின் பிரபல பக்தர்கள், கிருஷ்ணருக்கு நடக்கும் நித்ய பூஜைகள், விழாக்கள், அவரை வழிபடுவதற்கான அற்புத பாராயணங்கள் என, அனைத்தையும் இந்த புத்தகத்தில் ஆசிரியர் தந்துள்ளது பாராட்டத்தக்கது.
புத்தகத்தை படித்தவுடன், உடுபி சென்று கிருஷ்ணரை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
– ச.சுப்பு
நன்றி: தினமலர், 8/3/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818