கோயிலுக்குப் போகலாமா, சுட்டிகளே!
கோயிலுக்குப் போகலாமா, சுட்டிகளே!, பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150
தாத்தா பேரக்குழந்தைகளோடு கோவிலுக்கு செல்லும்போது தொணதொணக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல அமைந்த நுால் இது. தோப்புக்கரணம், கைகளை துாக்கி வணங்குவது, விசாரசர்மன் சண்டிகேஸ்வரர் ஆன அதிசயம், பூமியில் புதையலாக கிடைத்த சைலாதி என்ற குழந்தை எட்டு வயதுக்கு பின் நந்தீஸ்வரர் ஆன கதை, மூன்றாம் பிறையை சிவன் தலையில் சூடிக் கொள்ள காரணம், அனுமன் சிந்துாரம் வச்ச கதை என குழந்தைகளின் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான பதிலை சொல்லிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.
உண்மையாகவே குழந்தைகளோடு கோவிலை வலம் வந்த உணர்வு ஏற்படுவது, ஆசிரியரின் அழகான கதையமைப்புக்கு உதாரணம். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது.
– எம்.எம்.ஜெ.,
நன்றி: தினமலர், 1/11/20
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030784_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818