குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள், டாக்டர் இரா. விருத்தகிரி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.

குழந்தை வளர்ப்பு பற்றிய சிறந்த புத்தகம் இது. குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் எவை, அதற்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும், அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய சத்துள்ள உணவுகள் எவை என்பதையெல்லாம் விவரமாகப் படங்களுடன் விளக்குகிறார், டாக்டர் இரா. விருத்தகிரி.  ஆண், பெண் குழந்தைகள் வாலிப வயதை அடையும்போது, அவர்கள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், அக்காலக்கட்டத்தில் பெற்றோர்களின் கடமை ஆகியவை பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார். அளவிலும், தரத்திலும் பெரிதான இப்புத்தகம், பெற்றோர்களுக்கு அவசியமான கையேடு. நன்றி: தினத்தந்தி, 5/8/2015.  

—-

இஃதோர் கன்னிப்பெண் விழி, கௌதம்ராஜ் கிருஷ்ணன், வாசகன் பதிப்பகம், விலை 55ரூ.

உள்ளக்ககருத்துக்களையும், உலக கருத்துக்களையும் இணைத்து நூலாசிரியர் புதிய வடிவில் ஒரு கவிதை நூலை படைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *