முதலுதவி

முதலுதவி, வாண்டுமாமா, தனலட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 180ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024807.html வெளிநாடுகளில் முதல் உதவி பற்றிய பாடங்களையும் பயிற்சிகளையும் பள்ளிகளில் பாடமாக வைத்துள்ளனர். ஆனால் இங்கே முதலுதவி குறித்து நாம் அதிக அக்கறை செலுத்துவதில்லை. அன்றாட வாழ்க்கையில் நிகழும் தீக்காயங்கள், விபத்துகள், எலும்பு முறிவுகள், விஷக்கடிகள் போன்றவற்றுக்கு எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் என்பதை வாண்டுமாமா அருமையாக விளக்கியுள்ளார். சர்வ சாதாரணமான தலைவலியில் தொடங்கி விஷக்கடி வரையிலான ஆபத்தான முதலுதவி முறைகளை படங்களுடன் நுட்பமாக கூறியுள்ளார். செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளிலும், மருத்துவத் துறை சார்ந்த பயிற்சிக் கூடங்களிலும், வாகன ஓட்டுநர் பயிற்சிக் கூடங்களிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.

—-

சிறுதானிய சமையல் குறிப்புகள், பி. ஜெனீப்பர் பிலிப், நலவாழ்வு பதிப்பகம், வேலூர், விலை 142ரூ.

உணவு பழக்கவழக்கங்களில் பயன்படுத்தி வந்த சிறுதானியங்களை நாம் மறந்துவிட்டதால் நீரழிவு, இதய கோளாறு போன்ற நோய்களுக்கு ஆள்படுகிறோம். இதனை மாற்றுவதற்கும் உணவுப் பழக்கத்தை மீட்டெப்பதற்கான முயற்சியே இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *