கடல்களும் கண்டங்களும்

கடல்களும் கண்டங்களும், வாண்டுமாமா, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. அறிவியல் நூல்களை எழுதுவதில் புகழ் பெற்ற “வாண்டுமாமா” எழுதிய நூல் “கடல்களும் கண்டங்களும்”. “உலகம் உருண்டையானது அல்ல; தட்டையானது” என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அஞ்சா நெஞ்சம் படைத்த சிலர் கடலின் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் கப்பலில் பயணம் செய்து, புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர். அவர்களில், அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு கடல் மார்க்கத்தை கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த கேப்டன் குக், கனடாவை கண்டுபிடித்த ஜான் கபாட் உள்பட 14 […]

Read more

முதலுதவி

முதலுதவி, வாண்டுமாமா, தனலட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024807.html வெளிநாடுகளில் முதல் உதவி பற்றிய பாடங்களையும் பயிற்சிகளையும் பள்ளிகளில் பாடமாக வைத்துள்ளனர். ஆனால் இங்கே முதலுதவி குறித்து நாம் அதிக அக்கறை செலுத்துவதில்லை. அன்றாட வாழ்க்கையில் நிகழும் தீக்காயங்கள், விபத்துகள், எலும்பு முறிவுகள், விஷக்கடிகள் போன்றவற்றுக்கு எப்படி முதலுதவி அளிக்க வேண்டும் என்பதை வாண்டுமாமா அருமையாக விளக்கியுள்ளார். சர்வ சாதாரணமான தலைவலியில் தொடங்கி விஷக்கடி வரையிலான ஆபத்தான முதலுதவி முறைகளை படங்களுடன் நுட்பமாக கூறியுள்ளார். […]

Read more

இவள் நெருப்புக்கு இணையானவள்

இவள் நெருப்புக்கு இணையானவள், ஞா. சிவகாமி, மணிமேகலை பிரசுரம், பக். 136, விலை 100ரூ. இத்தனை சிறிய நாவலில், எத்தனை எத்தனை விஷயங்களைப் பற்றி ஆசிரியை பேசுகிறார் என்ற பிரமிப்பு உண்டாகிறது. வாழ்க்கையில் பலதரப்பட்ட அனுபவங்களை இவர் பெற்றிருப்பதால், ஒவ்வொரு தனிப்பட்ட அனுபவத்தையும், ஒவ்வொரு அத்தியாயங்களாக்கி, இந்த நாவலைச் செய்திருக்கிறார். பீக் ஹவர் பஸ் பயண அனுபவம், லஞ்ச ஊழல்கள், ஜாதி வேற்றுமைகள், முதியோர் இல்லத்தில் அவதியுறும் முதியவர்கள் என, பல பிரச்னைகளை இந்த நாவலில் அலசுகிறார். இவர் தலைமைச் செயலகத்தில் பணியில் இருந்தவர் […]

Read more

பாவேந்தம்

பாவேந்தம், பதிப்பாசிரியர்கள்-முனைவர்கள் இரா. இளங்குமரன், இரா. இளவரசு, கு. திருமாறன், பி. தமிழகன், கிடைக்குமிடம்-தமிழ் மண் பதிப்பகம், 2, சங்கார வேலர் தெரு, தி.நகர், சென்னை 17. பாரதிதாசன் படைப்புகள் முழுவதும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதைகள், காவியங்கள், கட்டுரைகள் அனைத்தும் 25 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. பாரதிதாசன், தொடக்க காலத்தில் ஆத்திகராக இருந்தவர். அப்போது எழுதிய பக்திப் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. 25 தொகுதிகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து இவ்வளவு தொகுதிகளை வெளியிடுவது […]

Read more

ஏன் எங்கே எப்படி?

ஏன் எங்கே எப்படி?, வாண்டுமாமா, கவிதா வெளியீடு, தபால் பெட்டி எண்-6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 350ரூ. மூளைக்கு வேலை 80-90களில் குழந்தைகளாக இருந்தவர்களைக் கவர்ந்த எழுத்தாளர் வாண்டுமாமா. பொதுஅறிவு சார்ந்து சிந்திக்கத் தூண்டிய அவர், தகவல்களில் துல்லியம், சரியான அயல்மொழி சொல் உச்சரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர். ஒரு பொது அறிவுத் தகவலை வெறும் தகவலாக மட்முல்லாமல் அதன் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டுவதில் வல்லவர். எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தைகளைக் கவரும் எளிய மொழியில் எழுதியது அவரது […]

Read more