ஏன் எங்கே எப்படி?

ஏன் எங்கே எப்படி?, வாண்டுமாமா, கவிதா வெளியீடு, தபால் பெட்டி எண்-6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 350ரூ. மூளைக்கு வேலை 80-90களில் குழந்தைகளாக இருந்தவர்களைக் கவர்ந்த எழுத்தாளர் வாண்டுமாமா. பொதுஅறிவு சார்ந்து சிந்திக்கத் தூண்டிய அவர், தகவல்களில் துல்லியம், சரியான அயல்மொழி சொல் உச்சரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர். ஒரு பொது அறிவுத் தகவலை வெறும் தகவலாக மட்முல்லாமல் அதன் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டுவதில் வல்லவர். எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தைகளைக் கவரும் எளிய மொழியில் எழுதியது அவரது […]

Read more

இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்

இரண்டாவது சுதந்திரம் தகவல் அறியும் உரிமைச் சட்டம், வடகரை த. செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், புஎ. 76, பஎ.27/1, பாரதீஸ்வரர் காலனி 2வது தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 100ரூ. தகவல் பெற ஓர் கையேடு மத்திய அரசு கொண்டுவந்த உருப்படியான சட்டங்களில் ஒன்று தகவல் அறியும் உரிமையுச் சட்டம். இன்று அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு முக்கியப் பங்குண்டு. பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களே இச்சட்டத்தை பயன்படுத்தி தகவல் அறிவதைக் காண முடிகிறது. […]

Read more

விஸ்வரூபம்

விஸ்வரூபம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 4, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-749-7.html வரலாற்றின் முக்கியமான நாட்கள் விஸ்வரூபம் நாவலைப் பற்றி எழுத முற்படுவது ஐராவதத்தின் பெருமையைப் பற்றி சோடாப்புட்டிக் கண்ணாடியைத் தொலைத்துவிட்டு அதைப் பார்க்கும் கிட்டப்பார்வைப் பேர்வழி விளக்க முற்படுவதுபோல இருக்குமோ என்று தோன்றுகிறது. இரா. முருகன் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அரசூர் வம்சம் நாவலின் தொடர்ச்சி இது. காசர்கோட்டை […]

Read more

தனிமையின் நூறு ஆண்டுகள்

தனிமையின் நூறு ஆண்டுகள், காப்ரியேல் கார்சியா மார்ககேஸ், தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 407, விலை 350ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-2.html கனவுபோன்ற மொழியில் நனவு போன்ற உலகில். ஸ்பானிய மொழியில் 60களில் வெளிவந்து 80களில் நோபெல் பரிசு பெற்ற மார்க்கேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல், தமிழின் அங்கமாகியிருக்கிறது. மகோந்தா கிராமம் நகரமாக மாற நூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் அந்நகரையே ஓர் உலகமாக விரிக்கிறார் மார்க்கேஸ். அந்த நகரை […]

Read more

எமனின் திசை மேற்கு

எமனின் திசை மேற்கு, லயன் முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி, விலை 100ரூ. கதையின் புதிய வடிவங்கள் கிராபிக் நாவல்கள் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானவை. காமிக்ஸ் சட்டகங்களைத் தாண்டிச் சற்று விரிவாக, ஆழமாகக் கதை சொல்பவை. தொடராக இல்லாமல், ஒரே புத்தகத்தில் கதை முடியும் வகையில் உருவாக்கப்படுவது என்பதுதான் காமிக்சுக்கும் கிராபிக் நாவலுக்கும் இடையில் உள்ள முக்கிய வித்தியாசம். நம் நாட்டில் காமிக்ஸ் என்றாலே, அவை சிறுவர்களுக்கானவை என்ற எண்ணம் வலுப்பட்டுவிட்டது. சாகசம் என்பதைத் தாண்டி தொலைதூர நாடுகளின் அரசியல், போர், இனநிறவெறி […]

Read more

காவடிச் சிந்தும் கவிஞனின் வரலாறும்

காவடிச் சிந்தும் கவிஞனின் வரலாறும், அரங்க. சீனிவாசன், அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை 78, விலை 120ரூ. வண்ணமயமான வாழக்கை. பாரதியின் வாழ்க்கையைப்போல அண்ணாமலை ரெட்டியாரின் வாழ்க்கையும் வண்ணமயமானது. அரங்க. சீனிவாசனால் எழுதப்பட்ட காவடிச் சிந்தும் கவிஞன் வரலாறும் என்னும் நூலின் வழியே இதை அறிய முடிகிறது. அவர்களுக்கெனத் தனி சாம்ராஜ்யம். அதை கவிராஜனாகத் தன்னை அறிவித்துக்கொள்வது போன்ற பண்புகளில் இருவருக்கும் உள்ள உற்றுமை நெருக்கத்தைத் தருகிறது. கண்கள் கூசப் பிரகாசத்தொளி மாசற்று விலாசத்தோடு இதுபோன்ற மொழியின் சௌந்தர்யம் […]

Read more

இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும்

இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும், தமிழில்-மருத்தவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர், அடையாளம், அடையாளம் 1205/1, கருப்பூர் சாலை புத்தாநத்தம், திருச்சி 621310. விலை 40ரூ. உடல்நலம் காக்கும் கையேடு, இந்நூல் மேயோ கிளினிக்னின் ஹை பிளாட் பிரஷர் அண்ட் யுவர் ஹார்ட்- 5 ஸ்டெப்ஸ் யு கேன் டேக் தட் சேவ் யுவர் லைஃப் என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம். உடன் இருந்தே மௌனமாகக் கொல்லும் நோய் என ரத்த மிகை அழுத்தத்தை மருத்துவ உலகில் சொல்வதுண்டு. ஒருவருக்கு ரத்த மிகை அழுத்தம் இருக்கிறது […]

Read more