பாதுஷா என்ற கால்நடையாளன்

பாதுஷா என்ற கால்நடையாளன், உண்ணி.ஆர், தமிழில்: சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.175. இளம் தலைமுறை மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான உண்ணி.ஆரின் சிறுகதைத் தொகுப்பு இது. இதிலுள்ள கதைகள், அதிகபட்சம் நான்கைந்து பக்கங்களே வருகின்றன. அதற்குள் வாழ்க்கையின் பலவித அம்சங்களை, மனத்தின் வினோதங்களைச் சித்திரிக்க முயல்கின்றன. மரியா என்னும் நோயுற்ற சிறுமியை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ள ‘மூன்று பயணிகள்’, இழப்பின் துயரத்துக்கு அருகில் நம்மை நிறுத்துகிறது. சில மணி நேரங்கள் முன்பு கடற்கரையில் காலாற நடந்துவந்த பாதுஷா, வெளிச்சம் வராத சிறைக்கூடத்தில் அகப்பட்டுக்கிடக்கும் துயரத்தை […]

Read more

மதில்கள்

மதில்கள், வைக்கம் முகமது பஷீர், தமிழில் சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம். விடுதலையை விரும்பாத காதல் வைக்கம் முகமது பஷீர் மலையாளத்தில் எழுதி சுகுமாரனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மதில்கள் நாவலை சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. குறுநாவலான மதில்கள் மலையாளத்தில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. இந்த நாவல், பஷீரின் சொந்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. எழுத்தாளரான அவர், அரசுக்கு எதிராக எழுதும் கருத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் இருக்கும் சிறைக்கு, அடுத்த அறையில் நாராயணி என்ற பெண் கைதி இருக்கிறார். இவர்களுக்கு இடையே அரும்பும் காதல்தான் […]

Read more

தனிமையின் நூறு ஆண்டுகள்

தனிமையின் நூறு ஆண்டுகள், காப்ரியேல் கார்சியா மார்ககேஸ், தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக். 407, விலை 350ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-161-2.html கனவுபோன்ற மொழியில் நனவு போன்ற உலகில். ஸ்பானிய மொழியில் 60களில் வெளிவந்து 80களில் நோபெல் பரிசு பெற்ற மார்க்கேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவல், தமிழின் அங்கமாகியிருக்கிறது. மகோந்தா கிராமம் நகரமாக மாற நூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் அந்நகரையே ஓர் உலகமாக விரிக்கிறார் மார்க்கேஸ். அந்த நகரை […]

Read more

பட்டு

பட்டு, அலெசாண்ட்ரோ பாரிக்கோ, தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில், பக். 120, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-5.html சொல்லாத சொற்களுக்குப் பொருள் அதிகம் என்பதைப் படித்து முடித்ததும் உணரச்செய்கிறது பட்டு மொழிபெயர்ப்பு நாவல். துண்டு துண்டாகத் தாவிச் செல்லும் மொழிபெயர்ப்பு. இறுதியில் கோவையாக நமக்கு ஒரு சித்திரத்தை வழங்குகிறது. 19ம் நூற்றாண்டில் ஒரு பட்டு வியாபாரியின் கடல் கடந்த காதலை மென்மையாக நமக்கு விவரிக்கிறது. பிரான்ஸ் நாட்டு ராணுவத்தில் பணிபுரிந்த பிறகு பட்டுப் புழு […]

Read more

பட்டு

பட்டு, அலெசான்ட்ரோ பாரிக்கோ, தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக்.120, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-5.html தமிழில் இத்தாலி நாவல். நல்ல மொழிபெயர்ப்பு. 18ஆம் நூற்றாண்டில் பட்டுப்புழு வியாபாரத்துக்காக ஆஸ்திரியா, ரஷ்யா வழியாக ஜப்பான் செல்லும் கதைநாயகன், அங்கே ஒரு குழுத் தலைவனின் உரிமைப்பெண் மீதுகொள்ளும் நிறைவேறாக் காதல்தான் கதை. தன் மனைவியின் கல்லறையில் இன்னொரு பூமாலையும் இருப்பதைக் கண்ட பிறகுதான், தனக்கு ஜப்பானிய மொழியில் அவள் எழுதிய கடிதம் (பென்ட்ஹவுஸ் […]

Read more