பாதுஷா என்ற கால்நடையாளன்
பாதுஷா என்ற கால்நடையாளன், உண்ணி.ஆர், தமிழில்: சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.175.
இளம் தலைமுறை மலையாள எழுத்தாளர்களில் ஒருவரான உண்ணி.ஆரின் சிறுகதைத் தொகுப்பு இது. இதிலுள்ள கதைகள், அதிகபட்சம் நான்கைந்து பக்கங்களே வருகின்றன. அதற்குள் வாழ்க்கையின் பலவித அம்சங்களை, மனத்தின் வினோதங்களைச் சித்திரிக்க முயல்கின்றன.
மரியா என்னும் நோயுற்ற சிறுமியை மையமாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ள ‘மூன்று பயணிகள்’, இழப்பின் துயரத்துக்கு அருகில் நம்மை நிறுத்துகிறது. சில மணி நேரங்கள் முன்பு கடற்கரையில் காலாற நடந்துவந்த பாதுஷா, வெளிச்சம் வராத சிறைக்கூடத்தில் அகப்பட்டுக்கிடக்கும் துயரத்தை ‘பாதுஷா என்ற கால்நடையாளன்’ கதையில் விநோதத்துடன் சொல்கிறார் உண்ணி.
திரைப்படங்களாகக் கவனம் பெற்ற உண்ணியின் ‘ஒழிவுதிவசத்த களி’, ‘லீலை’ ஆகிய சிறுகதைகளும் இத்தொகுப்பில் உண்டு. காரல் மார்க்ஸ் குறித்த புதுமையான சிறுகதையும் உள்ளது.
நன்றி: தமிழ் இந்து, 27/4/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027884.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818