பட்டு
பட்டு, அலெசான்ட்ரோ பாரிக்கோ, தமிழில்-சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001, பக்.120, விலை 95ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-801-5.html
தமிழில் இத்தாலி நாவல். நல்ல மொழிபெயர்ப்பு. 18ஆம் நூற்றாண்டில் பட்டுப்புழு வியாபாரத்துக்காக ஆஸ்திரியா, ரஷ்யா வழியாக ஜப்பான் செல்லும் கதைநாயகன், அங்கே ஒரு குழுத் தலைவனின் உரிமைப்பெண் மீதுகொள்ளும் நிறைவேறாக் காதல்தான் கதை. தன் மனைவியின் கல்லறையில் இன்னொரு பூமாலையும் இருப்பதைக் கண்ட பிறகுதான், தனக்கு ஜப்பானிய மொழியில் அவள் எழுதிய கடிதம் (பென்ட்ஹவுஸ் லெட்டர்ஸ்- ஃபேன்டஸி லவ்வகை), உண்மையில் மனைவி எழுதி, ஜப்பானிய மொழிக்கு மாற்றப்பட்ட உண்மை தெரிய வருவதுதான் கதையின் உச்சம். அத்தியாயங்கள் கதை நறுக்குகளாக அமைந்திருப்பது மட்டுமே நாவலின் புதுமை. நன்றி: தினமணி, 20/5/2013.
—-
விளையாட்டு விஞ்ஞானம், அ. சுப்பையா பாண்டியன், விகடன் பிரசுரம், விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-843-6.html
கண்ணாடி தம்ளருக்குள் போடப்பட்ட அந்துருண்டைகள் நடனமாடும். பேனாவை ஊதினால் இசை கேட்கும். பலூனைச் சுழற்றினால் நாய் ஊளையிடும். எதிர்த்திசையில் தீக்குச்சிகள் ஓடும். இவையெல்லாம் மந்திரமோ, மாஜிக்கோ இல்லை. கொஞ்சம் அறிவியல். கொஞ்சம் மூளை இருந்தால் போதும். சுட்டி விகடன் பத்திரிகையில் வெளியான செய்முறை வினோதங்களின் தொகுப்பு. பாடம் என்றால் கசக்கும். விளையாட்டோடு பாடம் என்றால் இனிக்கும் என்கிறார் அ. சுப்பையா பாண்டியன். குழந்தைகளைக் கவரும் நூல். நன்றி: கல்கி, 26/5/2013.
