கம்பன் சில தரிசனங்கள்
கம்பன் சில தரிசனங்கள், பேராசிரியர் மு. ராமச்சந்திரன், ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை, பக். 136, விலை 110ரூ.
ராஜபாளையம் கம்பன் கழகத்தார் ஆண்டுதோறும் ஒரு நூல் வெளியிடும் வேள்வியைத் தவறாது செய்து வருகின்றனர். இந்த ஆண்டில், இந்நூலைக் கம்பன் அன்பர்களுக்கு அளித்துள்ளனர். அவர்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும். இந்நூலாசிரியர் மு. ராமசந்திரன், நயத்தக்க நாகரிகத்துடன் தகுந்த சொல்லாட்சிகளுடன் நறுக்குத் தெரித்ததுபோல, நகைச்சுவை கலந்து, நூலை எழுதியிருப்பது, பேச்சில்மட்டுமல்ல எழுத்திலும் அப்படியே என்று நிலை நிறுத்துகிறார். இந்நூலில் 10 கட்டுரைகள் உள்ளன. பத்தும் பத்து ரத்தினங்கள் என்லாம். நூல் பலமுறை படித்து இன்புறத்தக்க வகையில் உள்ளது. அனைவரும் படித்து பயன் அடையலாம். -டாக்டர் கலியன்சம்பத்து.
—-
அடால்ஃப் ஹிட்லர், எம்.ஏ.பழனியப்பன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 160, விலை 90ரூ.
ஜெர்மன் நாட்டைப் பன்னிரண்டே ஆண்டுகள் ஆண்டு லட்சக்கணக்கில் யூதர்களைக் கொன்று குவித்து, உலகமகா கொலைகாரன் என்ற புகழ்(?) படைத்தவர் ஹிட்லர். அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்களை அடுக்கி படிப்பவர்களுக்கு சோர்வைத் தராமல், நல்ல விறுவிறுப்புடன் பரபரப்பு நிறைந்த நாவலை எழுதுவதுபோல் நூலை படைத்திருக்கிறார் ஆசிரியர். பாராட்டத்தக்க முயற்சி. -சிவா. நன்றி:தினமலர், 19/5/2013.