என் நாடு என் மக்கள் எனது போராட்டம்

என் நாடு என் மக்கள் எனது போராட்டம், அடால்ஃப் ஹிட்லர், தமிழில் ஆர்.சி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 352, விலை 175ரூ. உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் சுயசரிதை இந்நூல். அவருடைய இளமைக் காலம் முதல் 1918 வரையில் நிகழ்ந்த அவருடைய சொந்த வாழ்க்கை, அரசியல் நிகழ்வுகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாதாரண ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், உலகின் மாபெரும் சர்வாதிகாரியாக மாற அவருடைய கம்யூனிச எதிர்ப்பு சிந்தனை முறையே காரணமாக இருந்திருக்கிறது. “ஒரு கொள்கை பரவுவதைத் தடுக்க […]

Read more

தித்திக்கும் தீந்தமிழ்

தித்திக்கும் தீந்தமிழ், கவிஞர் கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், பக். 175, விலை 100ரூ. கவிஞர் கா. வேழவேந்தன் சங்க இலக்கியம், சமகால இலக்கியம், தமிழகத் தமிழரின் படைப்புகள், புலம்பெயர் தமிழரின் ஆக்கங்கள் என்று ஒன்றுவிடாமல் தன் ஆய்வுப் பார்வையைச் செலுத்தி தீந்தமிழின் சுவையை அள்ளித்தரும் தொகுப்பு நூல் இது. அண்ணாவின் உயர் தனிப் பண்புகள், பெரியார், காந்தியடிகள், மு.வ.வின் பெருமைகள் என்று சான்றோர் பலரின் எளிமை, நேர்மை, ஒழுக்கத்தை, மன உறுதியை, கொள்கைப் பிடிப்பை மற்றவர் உணர்ந்து நடக்கும் வகையில் திறம்படத் தந்துள்ளார். […]

Read more

கம்பன் சில தரிசனங்கள்

கம்பன் சில தரிசனங்கள், பேராசிரியர் மு. ராமச்சந்திரன், ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை, பக். 136, விலை 110ரூ. ராஜபாளையம் கம்பன் கழகத்தார் ஆண்டுதோறும் ஒரு நூல் வெளியிடும் வேள்வியைத் தவறாது செய்து வருகின்றனர். இந்த ஆண்டில், இந்நூலைக் கம்பன் அன்பர்களுக்கு அளித்துள்ளனர். அவர்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கதாகும். இந்நூலாசிரியர் மு. ராமசந்திரன், நயத்தக்க நாகரிகத்துடன் தகுந்த சொல்லாட்சிகளுடன் நறுக்குத் தெரித்ததுபோல, நகைச்சுவை கலந்து, நூலை எழுதியிருப்பது, பேச்சில்மட்டுமல்ல எழுத்திலும் அப்படியே என்று நிலை நிறுத்துகிறார். இந்நூலில் 10 கட்டுரைகள் உள்ளன. பத்தும் பத்து […]

Read more