இருவேறு உலகங்கள்

இருவேறு உலகங்கள், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், விலை 350ரூ. இன்றைய இந்திய சமுதாயம் வறுமை, அறியாமை, தீண்டாமை போன்ற ஒரு உலகத்திலும், அறிவுடைமை, செல்வச்செழிப்பு, வெறுப்பு என்ற இன்னொரு உலகத்திலும் பயணித்து கொண்டிருக்கிறது என இருவேறு உலகங்கள் என நாவலை படைத்துள்ளார் ஆசிரியர். சாதி என்ற குறுகிய வட்டத்துக்குள் நாடு பிரிந்து கிடப்பதையும், தீண்டாமை என ஒடுக்குமுறையால் தலித் மக்கள் தனித்து நிற்பதையும் படம் பிடித்து காட்டுகிறார். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

ஐங்குறு நாவல்கள்

ஐங்குறு நாவல்கள், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், பக்.120, விலை 100ரூ. சங்க கால சோழ மன்னனை மையப்படுத்தி, அந்த காலத்தில் நிலவிய வாழ்க்கை சூழலையும், மொழி நடையையும் மனதில் இருத்தி எழுதப்பட்டுள்ளது. ‘விடியல்’ என்ற குறுநாவல், ஈழத் தமிழர்களின் துயர வாழ்வை உணர்த்தி நம்மை கண்ணீர் சிந்த வைக்கிறது. பல்வகை கருப்பொருட்கள், காலச்சூழல்கள், மனிதர்கள் உள்ளிட்டவை அடங்கிய வண்ணக் களஞ்சியமாகத் திகழ்கிறது இந்நுால். நன்றி:தினமலர், 27/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

இன்றும் காந்தியம்

இன்றும் காந்தியம், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், பக். 96, விலை 70ரூ. இன்றைய சமூகத்தில், காந்தியம் கவைக்கு உதவாது என்று பலர் நினைக்கலாம். இந்தச் சூழலிலும் கூட, காந்திய தத்துவங்களும் போராட்ட வழிகளும் எவ்வளவு நடைமுறை சாத்தியமானவை என்று, நூலாசிரியர் இந்த நூல் மூலம் சிந்திக்க வைக்கிறார். உதாரணமாக, அகிம்சையின் அடிப்படைத் தத்துவம், தன்னை வருத்திக் கொண்டு எதிரியின் மனதில் நியாய உணர்வை விழிப்புறச் செய்வது தான். ‘நியாய உணர்வு’ என்பது, ‘தர்மம்’ என்ற வார்த்தையின் பொருளாக கருதலாம். சிறிதும் தவறற்ற சிந்தனை அது. […]

Read more

தித்திக்கும் தீந்தமிழ்

தித்திக்கும் தீந்தமிழ், கவிஞர் கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், பக். 175, விலை 100ரூ. கவிஞர் கா. வேழவேந்தன் சங்க இலக்கியம், சமகால இலக்கியம், தமிழகத் தமிழரின் படைப்புகள், புலம்பெயர் தமிழரின் ஆக்கங்கள் என்று ஒன்றுவிடாமல் தன் ஆய்வுப் பார்வையைச் செலுத்தி தீந்தமிழின் சுவையை அள்ளித்தரும் தொகுப்பு நூல் இது. அண்ணாவின் உயர் தனிப் பண்புகள், பெரியார், காந்தியடிகள், மு.வ.வின் பெருமைகள் என்று சான்றோர் பலரின் எளிமை, நேர்மை, ஒழுக்கத்தை, மன உறுதியை, கொள்கைப் பிடிப்பை மற்றவர் உணர்ந்து நடக்கும் வகையில் திறம்படத் தந்துள்ளார். […]

Read more

பொது அறிவுக் களஞ்சியம்

பொது அறிவுக் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 190ரூ. பல்வேறு தகவல்களை, சிறிய துணுக்குகள் வடிவத்தில் கூறும் நூல். பல புத்தகங்களில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்களை, இந்த ஒரே நூலில் திரட்டித் தந்திருக்கிறார் பேராசிரியர் கே. சுகுமாரன். மாணவ – மாணவிகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —-   சமூக நீதி காத்த தலைவர்கள், ஏ.கே.எஸ். புக்ஸ வேர்ல்டு, சென்னை, விலை 120ரூ. பகுத்தறிவு பகலவன் பெரியார். அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் ஆகிய 3 […]

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா

இந்திய இலக்கியச் சிற்பிகள்-மீரா, டாக்டர் இரா.மோகன், சாகித்ய அகாதெமி, பக். 112, விலை 50ரூ. பேராசிரியர் மீரா எப்படி கவிஞராய், போராளியாய், கட்டுரை ஆசிரியராய், பத்திரிகையாளராய், பதிப்பாளராய் பல்வேறு அவதாரங்கள் எடுத்து, அதில் வெற்றியும் கண்டார் என்ற வரலாற்றை டாக்டர் இரா. மோகன், நுணுக்கி நுணுக்கி ஆராய்ந்து எழுதியுள்ளார். மீரா கவிதைகளில் அவரது மரப்புத் திறமையும் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் நூலில் அவரது வசன கவிதைத்திறனையும், குக்கூ, ஊசிகள் அங்கதச் சுவையின் அணிவகுப்பையும், கட்டுரைகளில் அவரது மொழி வீச்சையும், இந்நூலாசிரியர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் தந்துள்ளது மீரா பற்றிய […]

Read more

கிளைக்குத் திரும்பும் இலைகள்

கிளைக்குத் திரும்பும் இலைகள், கவிஞர் பாரியன்பன், அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 64, விலை 30ரூ. பட்டுப்போயின மரங்கள்! பாட்டெடுக்கும் குயில்கள்! மரம் பட்டுப்போனதற்கு குயில் எழுப்பும் பாட்டு, நம்மையும் அந்த சோகவலிக்குள் இழுத்துப் போட்டுக்கொள்கிறது. இதுதான் கவிதை. இதுதான் கவிதையின் உயிர். பாரியன்பனின் ஹைக்கூ கவிதைகளுக்கு எளிதில் நம்மை ஆட்கொள்ளும் சக்தி உண்டு என்பதற்கு இஃதோர் உதாரணம். அவர் கையாளும் குறியீடுகள், படிமங்கள், காட்சிப் புனைவுகள் நம்மை கவிதைகளிடம் நெருக்கமாகக் கொண்டு செல்கின்றன. பாசங்கற்ற, போலிகளற்ற பரவசம் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. நன்றி: […]

Read more

கபிலர்

கபிலர், கா. அரங்கசாமி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 50ரூ. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கப் புலவர்களால் போற்றப்பெற்றவர் கபிலர். திருகோவிலூர் பாடல் கல்வெட்டு இவர் பெருமையை பறைசாற்றுகிறது. கபிலர் குறித்து பல தமிழார்வலர்கள் புத்தகங்கள் எழுதியுள்ளனர். ஆனால் கபிலரின் வரலாற்றையும், கபிலரின் தமிழியல், ஆளுமைத்திறன், இலக்கியக் கோட்பாடுகள் குறித்து மாறுபட்ட கோணத்தில் படம்பிடித்து காட்டுகிறார் கல்வெட்டியல் புலமை பெற்ற நூலாசிரியர் கா. அரங்கசாமி. நன்றி: தினத்தந்தி 10/4/13.   —-   சாம்ராட் […]

Read more