இன்றும் காந்தியம்

இன்றும் காந்தியம், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், பக். 96, விலை 70ரூ.

இன்றைய சமூகத்தில், காந்தியம் கவைக்கு உதவாது என்று பலர் நினைக்கலாம். இந்தச் சூழலிலும் கூட, காந்திய தத்துவங்களும் போராட்ட வழிகளும் எவ்வளவு நடைமுறை சாத்தியமானவை என்று, நூலாசிரியர் இந்த நூல் மூலம் சிந்திக்க வைக்கிறார்.

உதாரணமாக, அகிம்சையின் அடிப்படைத் தத்துவம், தன்னை வருத்திக் கொண்டு எதிரியின் மனதில் நியாய உணர்வை விழிப்புறச் செய்வது தான். ‘நியாய உணர்வு’ என்பது, ‘தர்மம்’ என்ற வார்த்தையின் பொருளாக கருதலாம்.

சிறிதும் தவறற்ற சிந்தனை அது. இதை நன்றாகப் புரிந்து கொண்டு, அமெரிக்கச் சூழ்நிலையில் செயல்படுத்தி வெற்றி கண்டவர் மார்ட்டின் லூதர் கிங்.

அமெரிக்காவில், 80 சதவீதம் வெள்ளையர்கள்; 14 சதவீதம் பேர் தான் கருப்பர்கள். அந்தச் சூழலிலும் காந்தியம் வெல்லுமா என்ற சந்தேகம், மார்ட்டின் லூதர் கிங்குக்கு இருந்தது. ஆனால், போராட்டம் மூலம் அதைச் சாத்தியப்படுத்தினார். காந்தியம் இன்றும் சக்தி வாய்ந்த ஆயுதம். இது, மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

-எஸ்.குரு

நன்றி: தினமலர், 21/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *