பொது அறிவுக் களஞ்சியம்
பொது அறிவுக் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 190ரூ.
பல்வேறு தகவல்களை, சிறிய துணுக்குகள் வடிவத்தில் கூறும் நூல். பல புத்தகங்களில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய விஷயங்களை, இந்த ஒரே நூலில் திரட்டித் தந்திருக்கிறார் பேராசிரியர் கே. சுகுமாரன். மாணவ – மாணவிகளுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.
—-
சமூக நீதி காத்த தலைவர்கள், ஏ.கே.எஸ். புக்ஸ வேர்ல்டு, சென்னை, விலை 120ரூ.
பகுத்தறிவு பகலவன் பெரியார். அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் ஆகிய 3 தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்தளித்திருக்கிறார் ஆதனூர் சோழன். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.
—-
மாவீரர் மூவர், சித்தார்த்தன், கண்ணப்பன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
மாவீரன் அலெக்சாண்டர், ஜான்சி ராணி, மாவீரன் நெப்போலியன் ஆகிய மூன்று வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் அடங்கிய நூலாகும். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.