தென்றல் வீசிய திரை வானம்
தென்றல் வீசிய திரை வானம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2 புத்தகங்கள் விலை ஒவ்வொன்றும் ரூ. 500.
தமிழ்த்திரைபட வரலாற்றை 2 புத்தகங்களில் விவரிக்கும் நூல். இதன் ஆசிரியர் டி. ஸ்ரீனிவாஸ், நிறைய விஷயங்களைக் கூறுகிறார். இடையிடையே, இந்திப்பட வரலாறு, தெலுங்குப்பட வரலாறு ஆகியவற்றையும் புகுத்தி உள்ளார். படங்கள் மிகச்சிறியவையாக உள்ளன. சற்று பெரிதாக்கி இருக்கலாம். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.
—-
கற்க கசடற விற்க அதற்குத்தக, விகடன் பிரசுரம், சென்னை, விலை 120ரூ.
கல்வி இப்போது வணிகமாகிவிட்டது. அதுவும் அதிக வருமானம் வரும் வியாபாரம். மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளின் பெருக்கத்திற்கும், அரசு பள்ளிகள் வீழ்ச்சி அடைவதற்கும் என்ன காரணம் என்பதை இந்த நூலில் எழுத்தாளர் பாரதி தம்பி நடுநிலையோடு ஆராய்ந்திருக்கிறார். ஒரு குழந்தையின் அறிவுத்திறன் தாய் மொழியில் படிக்கும்போது மட்டுமே முழுமை பெறுகிறது என்று வாதாடுகிறார். அரசுப் பள்ளிகளை மீட்க முடியும் என்ற நம்பிக்கை விதைகளைத் தூவுகிறார். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.