அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம், என்.ஸ்ரீநிவாசன், கண்ணப்பன் பதிப்பகம், பக்.496, விலை 300ரூ. நம் அன்றாட வாழ்வில் பார்க்கும், கேட்கும், உணரும் செயலாற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு தான் இந்நுால் என விளக்கம் தருகிறது. தண்ணீர் புவியின் உயிரோட்டம் இது. புவியின் பரப்பளவில் பூமிக்கு நீர்க்கோளம் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு உயிர்ப்போராட்டம் கொடுக்கும் இயற்கை அமுதம் என்ற விளக்கமும் அதில் உள்ள தகவல்கள் உள்ளன. ‘ஆல்கே’ எனும் கடற்பாசியினம் தோன்றி, 310 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்ற கேள்வி இப்போது எழுவது […]

Read more

பெருந்தலைவர் காமராஜர் (வாழ்க்கை வரலாறு)

பெருந்தலைவர் காமராஜர் (வாழ்க்கை வரலாறு), விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், விலை 110ரூ. பெருந்தலைவர், படிக்காத மேதை, பச்சைத் தமிழர், கர்ம வீரர், கறுப்பு காந்தி, கிங் மேக்கர் என்று மக்களால் மகிழ்வோடும், பெருமையோடும் அழைக்கப்பட்டவர்  காமராஜர். தனக்கென எதையும் தேடாமல் ஏழை மக்களின் நல்வாழ்வு மட்டுமே தனது உயிர் மூச்சாகக் கொண்டு இறுதி வரை ஏழைப் பங்காளனாக வாழ்ந்தவர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக 9 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். சுதந்திரம் பெற்ற பிறகு 9 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு முன்மாதிரி மாநிலமாக மாற்றிக்காட்டியவர். ‘இன்றைக்கு […]

Read more

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம்

ஏவுகணை நாயகன் அப்துல் கலாம், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், விலை 70ரூ. மறைந்த ஜனாதிபதி, பாரத ரத்னா, ஏவுகணை நாயகர் அப்துல்கலாம், மக்கள் மனதில் இடம் பிடித்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக அதே சமயம் மனதைத் தொடுகிற விதத்தில் எழுதியுள்ளார் விருதை ராஜா. நன்றி: தினத்தந்தி, 25/5/2017.   —-   மனிதர்களின் அலட்சியங்களும் தீர்வுகளும், சா.ஜெயக்குமார், மணிமேகலைப்பிரசுரம், விலை 70ரூ. சிந்திக்கும் திறன் கொண்ட மனிதனால், அவனுடைய வாழ்க்கையை இன்பமாகவும், சிறப்பானதாகவும் அமைத்து கொள்ள முடியவில்லை என்பதற்கு விடையளிக்கும் நூலாக […]

Read more

பெண்களுக்காக

பெண்களுக்காக, அர்ச்சனா நடராஜன், கண்ணப்பன் பதிப்பகம், பக். 336, விலை 200ரூ. டீன் – ஏஜ் பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை, அவர்களுக்கு உதவும் வகையில் மருத்துவம், மாதவிடாய், உள்ளிட்டப பெண்கள் பிரச்னைகள், கர்ப்பகால டிப்ஸ்கள், குழந்தைப் பராமரிப்பு, குடும்ப பராமரிப்பு, தொடர்ந்து வீட்டுத்தோட்டம் அமைப்பது வரையான பல அரிய தகவல்களைத் தாங்கி வரும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.

Read more

பெண்களுக்காக

பெண்களுக்காக, அர்ச்சனா நடராஜன், கண்ணப்பன் பதிப்பகம், விலை 200ரூ. “டீன் ஏஜ்” பெண்களுக்கு உடலில் மாற்றங்கள் ஏற்படும்போது அவர்களை தாய்மார்கள் எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும், பெண்களுக்கான உடற்பயிற்சிகள் எவை, கர்ப்பிணி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன… இப்படி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இந்த நூலில் எழுதியுள்ளார் அர்ச்சனா நடராஜன். பெண்களுக்கு அவசியமான அனைத்து விஷயங்களையும் ஒன்று திரட்டி, அவற்றை ஒரே புத்தகத்தில் அடக்கி இருப்பது பாராட்டுக்கு உரியது. பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

மலரும் நினைவுகளில் காமராஜர்

மலரும் நினைவுகளில் காமராஜர், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. காமராஜர் பற்றிய 100 நிகழ்வுகளைத் தொகுத்து மலரும் நினைவுகளாகத் தந்துள்ளார் நூலாசிரியர். தமிழக மக்களின் கல்விக் கண்ணைத் திறக்க அவர் உழைத்த உழைப்பு இங்கே சித்திரமாகக் காட்டப்பட்டுள்ளது. அவரது தியாகம், தொண்டு, எளிமை ஆகியவற்றைப் படிக்கப் படிக்க அது புதிய சரித்திரமாக நம்முன் வந்து நிற்கிறது. மனிதன் மனிதனாக வாழ விழிப்புணர்வு ஊட்டும் நூலாக அது விளங்கும் என்பது உண்மையே. நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

மலரும் நினைவுகளில் காமராஜர்

மலரும் நினைவுகளில் காமராஜர், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. அனைவரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள கர்மவீரர், அவரது வாழ்க்கையில் நடந்த 100 நிகழ்வுகளை நம் கண் முன் காட்டுகிறது இந்நூல் நன்றி: தினமலர், 06/11/2016.   —- நீயே உனக்கு நிகரானவன், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 100ரூ. திரைப்படங்களில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட எம்.ஆர்.ராதா, தனிமனித வாழ்க்கையில் ஒரு உன்னத மனிதராகத் திகழ்ந்தார் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 06/11/2016.

Read more

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள், ப்ரியாபாலு, கண்ணப்பன் பதிப்பகம், பக். 560, விலை 400ரூ. நன்னெறிகளை கதாபாத்திரங்களின் மூலம் எடுத்துரைக்கும் இக்கதைகள், மந்திரங்கள், தந்திரங்கள், மாயாஜாலங்கள் நிறைந்தவை. வாழ்க்கைக்குத் தேவையன ஆலோசனைகளையும் வழங்கும் கதைகள் இவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 04/5/2016.   —- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரை இசைப் பாடல்கள், தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 192, விலை 150ரூ. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல்களில் கண்ணியத்தையும் பகுத்தறிவையும் பொதுவுடமையையும் சிறப்பாகக் காணலாம் என்பதற்கு இத்தொகுப்பு நூலே சான்று. -இரா. மணிகண்டன். […]

Read more

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள், ப்ரியா பாலு, கண்ணப்பன் பதிப்பகம், விலை 400ரூ. விக்கிரமாதித்தன் கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது வேதாளமும், விக்கிரமாதித்தனும் பங்கு கொண்ட கதைகளாகும். மன்னன் எப்படி நீதி செலுத்த வேண்டும்? மக்களை எப்படிக் காக்க வேண்டும் என்ற கருத்துகளை விக்கிரமாதித்தன் கதைகள் எடுத்துச் சொல்கின்றன. மேலும் வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குகின்றன. நன்னெறிகளை கதாபாத்திரங்கள் மூலம் எடுத்துரைக்கின்றன. இந்தக் கதைகள் மந்திரங்கள், தந்திரங்கள், மாயாஜாலங்கள் நிறைந்தவை. அத்தகைய கதைகளை எழுத்தாளர் ப்ரியா பாலு குழந்தைகளுக்கு புரியும் வகையில் எளிமையாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார். நன்றி: […]

Read more

இலக்கண விளக்கம்

இலக்கண விளக்கம், (எழுத்தியல், சொல்லியல், புணரியல், பொருளியல், யாப்பியல், அணியியல் ஆறு தனி நூல்கள்), கலாநிலையம் கே. இராஜகோபாலாச்சாரியார், கண்ணப்பன் பதிப்பகம், ஆறு நூல்களின் மொத்த விலை 570ரூ. இலக்கண விளக்கம் என்ற பெயரில் வந்துள்ள, இந்த ஆறு நூல்களும், தமிழுக்குச் சிறப்பைச் சேர்க்கின்றன. எளிய, இனிய நடையில், தமிழ் இலக்கணத்தை தெரிவிக்கின்றன. தமிழைப் பிழையின்றி எழுதவும், பேசவும் இலக்கண நூல்கள் பெரிதும் உதவுகின்றன. சொல்லுக்குஅடிப்படையான எழுத்து இலக்கணமும், சொல்லின் பெயர், வினை, இடை, உரி என்ற நான்கையும் விளக்கும் சொல் இலக்கணமும், சொற்கள் […]

Read more
1 2 3 4