மலரும் நினைவுகளில் காமராஜர்
மலரும் நினைவுகளில் காமராஜர், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ.
காமராஜர் பற்றிய 100 நிகழ்வுகளைத் தொகுத்து மலரும் நினைவுகளாகத் தந்துள்ளார் நூலாசிரியர். தமிழக மக்களின் கல்விக் கண்ணைத் திறக்க அவர் உழைத்த உழைப்பு இங்கே சித்திரமாகக் காட்டப்பட்டுள்ளது.
அவரது தியாகம், தொண்டு, எளிமை ஆகியவற்றைப் படிக்கப் படிக்க அது புதிய சரித்திரமாக நம்முன் வந்து நிற்கிறது. மனிதன் மனிதனாக வாழ விழிப்புணர்வு ஊட்டும் நூலாக அது விளங்கும் என்பது உண்மையே.
நன்றி: குமுதம், 26/4/2017.