வாங்க பேசலாம் செல்லம்ஸ்
வாங்க பேசலாம் செல்லம்ஸ், இளங்கோவன் கீதா, படி வெளியீடு, விலை 100ரூ.
இளங்கோவன் முகநூலில் எழுதிய குறிப்புகள் வானத்திற்குக் கீழான அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசுகின்றன. வகைப்படுத்த முடியாதபடிக்கு ஆவேசமும், அன்பும், கருணையும், விவாதமும் கொண்ட பகுதிகள். மெல்லிய புன்னகையோடு ரொம்பவும் உள்புகுந்து வருந்தாமல் செல்கிற சுலபமான பத்திகள். எல்லோருடைய வாழ்க்கைக்கும் சம்பந்தம் உடைய பகுதிகளைப் பற்றி பேசுவதால் நமக்கு நெருக்கமாகிவிடுகின்றன.
எப்போதுமே உண்மைக்கு அருகில் இருப்பவை சுவாரஸ்யம் நிரம்பியவை. வாழ்க்கையைக் கொண்டாட்டமாகப் பார்த்து, முன் பின்னாய் யோசித்துப் பார்த்து எழுதப்பட்டவை. காதலர் தின முடிவில் ஆரம்பித்து, குடும்பம் என்னும் சுரண்டல் நிறுவனம் என்று பரவி சகலத்தையும் பேசுவதால், ஒரே புத்தகத்தில் பல கற்றுக்கொள்ளுதல் நடக்கிறது.
எதையும் அறிவுரை போன்ற தோரணையில் சொல்லிவிடாமல் சமபகிர்தலோடு, தோளில் கைபோட்டு சிநேகமாய் சொல்வதுபோலவே இருப்பதுதான் இதில் அழகு. ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டு அவரது அடுத்த பதிவுக்கு எதிர் பார்த்துக் காத்திருக்கலாம்.
நன்றி: குங்குமம், 21/4/2017.