கபிலர்
கபிலர், கா. அரங்கசாமி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, விலை 50ரூ.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கப் புலவர்களால் போற்றப்பெற்றவர் கபிலர். திருகோவிலூர் பாடல் கல்வெட்டு இவர் பெருமையை பறைசாற்றுகிறது. கபிலர் குறித்து பல தமிழார்வலர்கள் புத்தகங்கள் எழுதியுள்ளனர். ஆனால் கபிலரின் வரலாற்றையும், கபிலரின் தமிழியல், ஆளுமைத்திறன், இலக்கியக் கோட்பாடுகள் குறித்து மாறுபட்ட கோணத்தில் படம்பிடித்து காட்டுகிறார் கல்வெட்டியல் புலமை பெற்ற நூலாசிரியர் கா. அரங்கசாமி. நன்றி: தினத்தந்தி 10/4/13.
—-
சாம்ராட் அசோகன், சித்தார்த்தன், பன்மொழி பதிப்பகம், சிவிகாஸ் அடுக்ககம், 19/8 பாலகிருஷ்ணா தெரு, மயிலாப்பூர், சென்னை 4, விலை 280ரூ.
மவுரிய சக்கரவர்த்தி அசோகனை பற்றிய வரலாற்று நாவல். மொத்தம் 4 பாகங்களை கொண்டது. இதில் 2ம் பாகமான முதுவேனிலில் அசோகனில் இளமைக்காலத்தில் தொடங்கி கலிங்கத்து போர் வரை இடம் பெற்றுள்ளது. பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை கட்டிக்காக்க அசோகன் மேற்கொண்ட வழிமுறைகள், வாரிசுக்காக செய்துகொண்ட திருமணங்கள், புத்த மதத்தின் மேல் அசோகன் நாட்டம் கொள்வதற்கான காரணங்களை அழகாக தொகுத்துள்ளார் நாவல் ஆசிரியர் சித்தார்த்தன். நன்றி: தினத்தந்தி 10/4/13.
—-
தஞ்சை ராமையாதாஸ் திரைப்பாடல்கள், காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 24,விலை 175ரூ.
எம்.ஜி,ஆர், சிவாஜிகணேசன் காலத்தில், சினிமாவுக்கு வசனம், பாடல் எழுதுவதில் கொடி கட்டிப் பறந்தவர் தஞ்சை ராமையாதாஸ். வாராயோ வெண்ணிலாவே என்று இலக்கியச்சுவை ததும்பும் பாடலையும் எழுதுவார். ஜாலிலோ ஜிம்கானா என்று குத்துப்பாட்டும் எழுதுவார். டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுவதில் அசாத்திய திறமை படைத்தவர். அவருடைய பாடல் காட்டும் சமூக வாழ்வியல் பற்றி ஆய்வு செய்த முனைவர் மா. இராஜ். அதைப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். தஞ்சை ராமையாதாஸ் வாழ்க்கைக் குறிப்பையும், பாடல்களையும் அறிந்து கொள்ள சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி 10/4/13.