ஏன் எங்கே எப்படி?

ஏன் எங்கே எப்படி?, வாண்டுமாமா, கவிதா வெளியீடு, தபால் பெட்டி எண்-6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 350ரூ. மூளைக்கு வேலை 80-90களில் குழந்தைகளாக இருந்தவர்களைக் கவர்ந்த எழுத்தாளர் வாண்டுமாமா. பொதுஅறிவு சார்ந்து சிந்திக்கத் தூண்டிய அவர், தகவல்களில் துல்லியம், சரியான அயல்மொழி சொல் உச்சரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர். ஒரு பொது அறிவுத் தகவலை வெறும் தகவலாக மட்முல்லாமல் அதன் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டுவதில் வல்லவர். எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தைகளைக் கவரும் எளிய மொழியில் எழுதியது அவரது […]

Read more

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1

ஆய்வுக் களஞ்சியம் தொகுதி 1, நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், சென்னை 17, பக். 208, விலை 110ரூ. கபிலரின் வாழ்வியல் சிந்தனைகள், குறுந்தொகையில் உவமை நயம், கலித்தொகையில் நோக்கு, நற்றிணை நவிலும் கற்பு நெறி, சங்க இலக்கியத்தில் குந்தை, ஊடல் தணிக்கும் வாயிலாக, ஈத்துவக்கும் பெருஞ்சித்திரனார் உள்பட சங்க இலக்கியம் தொடர்பான 16 கட்டுரைகளும், திருக்குறள் உள்பட அற நூல்கள் தொடர்பான 3 கட்டுரைகளும் இந்நூலில் உள்ளன. ஒக்கூர் மாசாத்தியாரின் தனித்திறன் கட்டுரை தமிழ்ப் பெண் கவியின் கற்பனை வளம் உவமை நயம், […]

Read more