வைணவ இலக்கியம்

வைணவ இலக்கியம் (ஆய்வுக்கோவை), எட்டுதொகுதிகள், பதிப்பாசிரியர்கள்-முனைவர் ந.வெங்கடேசன், முனைவர் தெ.மேகநாதன், முனைவர் இரா. சதாசிவம், வெளியீடு-அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பக். 2038. தமிழ் இலக்கியத்தின் நாடளாவிய தன்மைக்கு எடுத்துக்காட்டு ஒம் நமோ நாராயணாய் எனும் எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில், எட்டுத் தொகுதிகளுடன் வெளியிடப்பட்ட நூல். நானூற்று நான்கு கட்டுரைகளுடன், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுடன் வெளிவந்துள்ள இந்த நூல், வைணவ இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல். வைணவ இலக்கியங்களான நாலாயிரத்திவ்ய பிரபந்தம், பாகவதம், ராமாயணம் முதலான இலக்கியங்களில் வெளிப்படையாகத் தோன்றும் கருத்துகளையும், உணர்த்துப்பட்டுள்ள கருத்துகளையும் வெளிப்படுத்தும் […]

Read more

பாவேந்தம்

பாவேந்தம், பதிப்பாசிரியர்கள்-முனைவர்கள் இரா. இளங்குமரன், இரா. இளவரசு, கு. திருமாறன், பி. தமிழகன், கிடைக்குமிடம்-தமிழ் மண் பதிப்பகம், 2, சங்கார வேலர் தெரு, தி.நகர், சென்னை 17. பாரதிதாசன் படைப்புகள் முழுவதும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதைகள், காவியங்கள், கட்டுரைகள் அனைத்தும் 25 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. பாரதிதாசன், தொடக்க காலத்தில் ஆத்திகராக இருந்தவர். அப்போது எழுதிய பக்திப் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. 25 தொகுதிகளையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. பாவேந்தர் படைப்புகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து இவ்வளவு தொகுதிகளை வெளியிடுவது […]

Read more