கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ்

கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ், ஜெகதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.80. பாவம் செய்பவர்களுக்கு ஆண்டவனால் தரப்படும் தண்டனையே நோய் என்ற கருத்தை உடைத்து நொறுக்கிய மருத்துவ அறிவியல் முன்னோடி பற்றி எழுதப்பட்டுள்ள நுால். பேய், பயம், கடவுள் கோபத்தால் நோய் வருகிறது என்பதெல்லாம் அப்பட்டமான பொய் என நிரூபித்து, அறிவியல் அணுகுமுறையால் வெற்றி பெற்றவர். இவரது கருத்துகள் மருத்துவ உலகில் இன்றும் அறியப்படுகின்றன. மருத்துவ சேவை புரிய விழையும் டாக்டர் எடுக்கும் சத்தியப் பிரமாணத்துக்கு, ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி என பெயர். பல நாடுகளில் […]

Read more

அழகர் கோயில்

அழகர் கோயில், தொ.பரமசிவன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.300 தமிழகத்தில் மிக முக்கியமான வைணவ திருக்கோவில்களில் ஒன்றான அழகர் கோவில் பற்றி ஆராய்ந்து, வரலாற்றுப்பூர்வமாக விரிவான தகவல்களுடன் வெளிவந்துள்ள நுால். கோவிலின் அமைப்பு, தோற்றம், இலக்கியங்களில் உள்ள குறிப்புகள், அழகர் கோவிலின் சமூகத் தொடர்பு என பல விபரங்களை ஆராய்ந்து, துல்லியமான தகவல்களை பதிவு செய்துள்ளது. அந்த வட்டார மக்களுக்கு கோவிலுடன் உள்ள தொடர்பு பற்றியும் விரிவாக ஆராய்கிறது. இதில், கள்ளர் இன மக்கள், இடையர் இன மக்கள், பள்ளர் மற்றும் பறையர் இன […]

Read more

தமிழரின் தோற்றமும் பரவலும்

தமிழரின் தோற்றமும் பரவலும், புலவர் கா.கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.120. சென்னைப் பல்கலைக் கழகத்தில், வி.ஆர்.ராமச்சந்திர தீட்ஷிதர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். இவர், 1940 நவம்பர் 29, 30ம் தேதிகளில் நிகழ்த்திய சொற்பொழிவே நுால் வடிவம் பெற்றுள்ளது. அது தமிழாக்கம் பெற்றுள்ளது. பழந்தமிழ் நாகரிகத்தின் வரலாற்று ஆசிரியர்கள் என்னும் தலைப்பில், ‘திராவிடர்கள், தென் இந்தியாவுக்கு வந்து குடியேறியவர்கள் என்ற கொள்கை வலுவான அடிப்படையைக் கொண்டிருப்பதாகவும், அதுவே முடிந்த முடிவாகி விட்டதாகவும் தோன்றுகிறது’ என்று கூறுகிறது. குள்ள வடிவம், கறுத்த தோல், நீண்ட […]

Read more

இரண்டாவது உலக யுத்தம்

இரண்டாவது உலக யுத்தம், வி.அ.மத்சுலேன்கோ, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.500 இரண்டாம் உலக யுத்தத்தை கண்முன் நிறுத்தும் நுால். வரலாற்று பின்னணியுடன் நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது. யுத்தம் துவங்குவதற்கு முன், ஐரோப்பிய நாடுகளில் நிலவிய நெருக்கடிச் சூழலுடன் துவங்குகிறது. எட்டு பெரிய அத்தியாயங்களில், துணைத் தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. இரண்டாம் அத்தியாயம், போர் துவக்க நிகழ்வை தெரிவிக்கிறது. போரின் போக்கு, ஏற்ற இறக்கங்கள், நாடுகளின் போர் தந்திரம், ஆயுதப்பயன்பாடு, அவற்றால் ஏற்பட்ட விளைவு என, போரின் துயர வரலாற்றை மிக நுட்பமாக படம் பிடிக்கிறது. போரின் […]

Read more

பாரதி பாடிய மணக்குள விநாயகர்

பாரதி பாடிய மணக்குள விநாயகர், சொ. சேதுபதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. மகாகவி பாரதியார் எல்லாத் தெய்வங்களையும் பாடியிருந்தாலும், அவர் முழுமுதல் பரம்பொருள் நிலையில் வைத்துப் போற்றியது விநாயகக் கடவுளையே என்பதை அவர் பாடிய “விநாயகர் நான்மணி மாலை’ நூல் தெற்றென உணர்த்துகிறது. பாரதியாரின் புகழ்பெற்ற சொற்றொடர்களான “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன்’, “தவமே புரியும் வகையறியேன்’, “அச்சமில்லை அமுங்குதலில்லை’ “நமக்குத் தொழில் கவிதை’, “பேசாப் பொருளை பேசநான் துணிந்தேன்’, “அன்பிற் சிறந்த தவமில்லை’, “கவலைப் படுதலே கருநரகு’ போன்றவை […]

Read more

மகாகவியின் பாஞ்சாலி சபதம்

மகாகவியின் பாஞ்சாலி சபதம், கு.ஞானசம்பந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.45. மகாகவி பாரதி எழுதிய குறுங்காவியமான பாஞ்சாலி சபதத்தை நாடக வடிவில் தரும் நுால். இந்திய விடுதலைப் போரில் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த குறுங்காவியத்தைப் புனைந்தார் பாரதி. அதை, மாணவ – மாணவியர் நாடகமாக நடிக்க ஏற்ற வடிவில் உருவாக்கியுள்ளார். கல்லுாரியில் படித்த காலத்தில், அதை நாடகமாக நடித்தது பற்றிய சுவாரசிய அனுபவத்தையும் முன்னுரையில் பதிவு செய்துள்ளார். வாசிக்கவும், அரங்கில் நடிப்பதற்கும் ஏற்ற நுால். – ராம். நன்றி: தினமலர், 7/11/21. இந்தப் புத்தகத்தை […]

Read more

பாரதியாரின் புதிய ஆத்திசூடி புதுமையும் பொதுமையும்

பாரதியாரின் புதிய ஆத்திசூடி புதுமையும் பொதுமையும், சொ.சேதுபதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. 12-ஆம் நூற்றாண்டில் ஒளவையாரால் எழுதப்பட்ட ஆத்திசூடியையும், இருபதாம் நூற்றாண்டில் பாரதியாரால் எழுதப்பட்ட புதிய ஆத்திசூடியையும் பல்வேறு கோணங்களில் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது இந்நூல். ஒளவையார் ஆத்திசூடி மூலமும் உரையும் தரப்பட்டுள்ளது. பாரதியாரின் புதிய ஆத்திசூடியின் ஒவ்வொரு வரிக்கும் பொருளுரை, விளக்கவுரை, மேற்கோள் பாடல்கள் என பலவும் தரப்பட்டுள்ளன. ஒளவையாரின் ஆத்திசூடி நூலுக்கு முன்னோடியாய் அமைந்தது ஐந்தாம் நூற்றாண்டில் மதுரைக் கூடலூர் கிழாரால் இயற்றப்பட்ட “முதுமொழிக் காஞ்சி; (ஓரடிப் பாடல்களைக் […]

Read more

ஞான விசாரணை

ஞான விசாரணை (ஆன்மிகக் கட்டுரைகள்)-கெளதம நீலாம்பரன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.364, விலை ரூ.350. மறைந்த பத்திரிகையாளர் கெளதம நீலாம்பரன் “ஞானபூமி’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், எளிய நடையும் செறிவான கருத்துகளும் கொண்டதாக உள்ளது. பக்தர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும், நாத்திகர்களின் அவதூறுகளுக்கும் பல கட்டுரைகளில் தெளிவான விளக்கம் அளிக்கிறார் நூலாசிரியர். நரகாசுர சதுர்த்தியா, நரக சதுர்த்தியா? ஐயப்பன் வரலாறு, சிவ வழிபாடு, உதங்க மகரிஷிக்கு மானுட சமத்துவத்தைக் காட்ட கண்ணன் நிகழ்த்திய திருவிளையாடல் (ஸ்ரீகிருஷ்ண தரிசனம்) உள்ளிட்ட […]

Read more

சிடுகா மருத்துவம்

சிடுகா மருத்துவம், டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.250 சித்த மருத்துவத்தில் ஓரிரு மூலிகைகளைப் பயன்படுத்தி, நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிடுகா மருத்துவமுறைகள் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு நோயையும் தலைப்பாகத் தந்து, நோய்களுக்கு மருந்து உருவாக்கிப் பயன் கொள்ளும் செயல்முறைகளைத் தந்து, நோய்களுக்கான காரணங்களும், பல நோய்களுக்கு மூலிகை சார்ந்த எண்ணெய்களின் பயன்களும் விளக்கப்பட்டுள்ளன. பல்வேறு மருத்துவ முறைகளில் அன்றாட வாழ்வில் நுகரும் அரிய கனிகள், கீரைகள், கிழங்குகள் மற்றும் மூலிகைகளின் அளப்பரிய பங்கை அறிய முடிகிறது.மிகவும் பரவலாக மக்கள் பாதிக்கப்படும் […]

Read more

இந்துமத இணைப்பு விளக்கம்

இந்துமத இணைப்பு விளக்கம், கே.ஆறுமுக நாவலர், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.208, விலை ரூ.200. இந்து மதம் என்றால் என்ன? இந்து மதத்தின் வேத, புராண, சாத்திர, இதிகாச நூல்கள் எவையெவை? இந்து மதத்தில் உட்பிரிவுகள் எத்தனை? துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் இவற்றுக்கு இடையே என்ன வேறுபாடு? ஆலயம் அமைக்கும் முறை, திருவிழாக்களின் தத்துவம் என்ன – இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக அமைந்துள்ளது இந்நூல். நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், 14 சைவ சித்தாந்த சாத்திரங்கள், நாலாயிர திவ்விய பிரபந்தம், ராமாயணம், மகாபாரதம் […]

Read more
1 2 3 10