கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ்
கிரேக்க மருத்துவ தந்தை ஹிப்போகிரேட்டஸ், ஜெகதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.80.
பாவம் செய்பவர்களுக்கு ஆண்டவனால் தரப்படும் தண்டனையே நோய் என்ற கருத்தை உடைத்து நொறுக்கிய மருத்துவ அறிவியல் முன்னோடி பற்றி எழுதப்பட்டுள்ள நுால். பேய், பயம், கடவுள் கோபத்தால் நோய் வருகிறது என்பதெல்லாம் அப்பட்டமான பொய் என நிரூபித்து, அறிவியல் அணுகுமுறையால் வெற்றி பெற்றவர்.
இவரது கருத்துகள் மருத்துவ உலகில் இன்றும் அறியப்படுகின்றன. மருத்துவ சேவை புரிய விழையும் டாக்டர் எடுக்கும் சத்தியப் பிரமாணத்துக்கு, ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி என பெயர். பல நாடுகளில் அக்காலத்தில் நிலவிய மருத்துவ முறைகளையும், அறுவை சிகிச்சை முறைகளையும் விளக்கியுள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்
நன்றி: தினமலர், 17/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%b9/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818