பாரதி பாடிய மணக்குள விநாயகர்

பாரதி பாடிய மணக்குள விநாயகர், சொ. சேதுபதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.240, விலை ரூ.225. மகாகவி பாரதியார் எல்லாத் தெய்வங்களையும் பாடியிருந்தாலும், அவர் முழுமுதல் பரம்பொருள் நிலையில் வைத்துப் போற்றியது விநாயகக் கடவுளையே என்பதை அவர் பாடிய “விநாயகர் நான்மணி மாலை’ நூல் தெற்றென உணர்த்துகிறது. பாரதியாரின் புகழ்பெற்ற சொற்றொடர்களான “எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன்’, “தவமே புரியும் வகையறியேன்’, “அச்சமில்லை அமுங்குதலில்லை’ “நமக்குத் தொழில் கவிதை’, “பேசாப் பொருளை பேசநான் துணிந்தேன்’, “அன்பிற் சிறந்த தவமில்லை’, “கவலைப் படுதலே கருநரகு’ போன்றவை […]

Read more

கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிப்பொடி

கம்பனில் ஆழம் கண்ட வேழம் கம்பன் அடிப்பொடி, சொ.சேதுபதி, வானதி பதிப்பகம்,  பக்.352, விலை ரூ.250. கம்பன் கழகங்களுக்கெல்லாம் தாய்க் கழகமாக விளங்குவது "கம்பன் அடிப்பொடி சா.கணேசனால் 1939-ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்ட கம்பன் கழகம்தான். இக்கழகத்தின் மூலம் உலகம் முழுவதும் கம்ப காவியத்தைக் கொண்டு சேர்த்த பெருமை சா.கணேசனையே சாரும். இந்நூல், சா.கணேசனை வேழமாக உருவகப்படுத்தி, அவர் கம்ப காவியத்தில் கண்டஆழத்தைக் கூறி, முழுக்க முழுக்க அவர் புகழபாடியிருக்கிறது. இதுவரை அச்சு வாகனம் ஏறாமல் இருந்த சா.கணேசனின் உரையும் பாட்டும் நூல் முதன்முதலில் இந்நூலில் […]

Read more

தருணம் பார்க்கும் தருணங்கள்

தருணம் பார்க்கும் தருணங்கள், சொ.சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 320, விலை 240ரூ சொல்லாட்சிக் கலையில் சிறந்து விளங்கும் முனைவர் சொ. சேதுபதியின் 22 இலக்கியக் கட்டுரைகளின் இனிய தொகுப்பே இந்த நூல். இலக்கியக் கட்டுரைகளின் அடி நாதமாக, மானிடநேயம், உயிரிரக்கம் ஒலித்துக் கொண்டிருப்பது நூலின் சிறப்பு. தொல்காப்பியம் முதல், தொடுக்கும் முகநூல் முடிய, நுவல்பொருளை வாழ்வியல் நோக்கில் வைத்துப் பார்க்கும் சிந்தனைகளின் தொகுப்பு இந்த நூல். தருணம் எனும் சொல்கொண்டு, சொல் விளையாட்டைச் சுடரச் செய்துள்ள திறம் பாராட்டத்தக்கது. கவிதை, சிறுகதை, […]

Read more

தருணம் பார்க்கும் தருணங்கள்

தருணம் பார்க்கும் தருணங்கள், சொ.சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 320, விலை 240ரூ. வாழ்வில் ஏற்படும் சந்தர்ப்பங்களை நாம் எத்தகைய முறையில் பயன்படுத்துகிறோமோ, அதற்கேற்பவே நமது வாழ்வும் சிறப்படையும் என்பது முன்னோர் கருத்து, அதன்படி நூலின் தலைப்பு சந்தர்ப்பத்தைக் குறிக்கும் தருணம் என்ற பொருளிலே அமைந்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்தது, படித்தது, கேட்டது என தனக்கு ஏற்பட்ட சமூகத் தாக்கத்தையும், அவற்றால் தனக்கு ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தையும் ஒவ்வொரு கட்டுரையில் ஆசிரியர் இலக்கிய நயத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் நாடகங்களை அலசி ஆராயும் முதல் […]

Read more

திருக்குர்ஆனின் பாதையில்

திருக்குர்ஆனின் பாதையில், இஸ்லாமிய நிறுவனம், சென்னை, விலை 100ரூ. திருக்குர் ஆன் ஓர் அறிவுக் கருவூலம். அருள் சுரக்கும் பெட்டகம். மனிதகுலம் முழுமைக்குமான சொத்து. அதை ஒரு புத்தகத்தைப் படிப்பது போல படிக்கக் கூடாது. அதை ஓதுவது ஒரு வகையான ஆன்மிக தியானம். அதை எந்த முறையில், எந்த நோக்கத்துடன் ஓதுகிறார்களோ அந்தளவுக்கு பயன் கிடைக்கும். திருக்குர்ஆனை எப்படி ஓத வேண்டும்? அதை ஓதுவதற்கு அடிப்படை முன் நிபந்தனைகள் என்ன? ஓதுவதன் விதிமுறைகள் என்னென்ன? கூட்டாக ஓதுவதன் தேவை என்ன? என்பன போன்ற தலைப்புகளில் […]

Read more

விடுதலைப் போரில் தமிழ் இசைப்பாடல்கள்

விடுதலைப் போரில் தமிழ் இசைப்பாடல்கள், சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் பல்வேறு போராட்ட வடிவங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டது. அரசியல் ரீதியான போராட்டங்களுக்கு மக்களுடைய ஆதரவைத் திரட்ட இசைப்பாடல்களும் பாடப்பட்டன. ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு எதிரான – தேசிய இயக்கத்துக்கு ஆதரவான பாடல்களைப் பாடிய போராட்ட வீரர்களின் வரலாற்றைச் சொல்வதே இந்நூல். குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ, ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ என்று வள்ளலார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பாடியது, 1922ஆம் ஆண்டு […]

Read more