திருக்குர்ஆனின் பாதையில்
திருக்குர்ஆனின் பாதையில், இஸ்லாமிய நிறுவனம், சென்னை, விலை 100ரூ.
திருக்குர் ஆன் ஓர் அறிவுக் கருவூலம். அருள் சுரக்கும் பெட்டகம். மனிதகுலம் முழுமைக்குமான சொத்து. அதை ஒரு புத்தகத்தைப் படிப்பது போல படிக்கக் கூடாது. அதை ஓதுவது ஒரு வகையான ஆன்மிக தியானம். அதை எந்த முறையில், எந்த நோக்கத்துடன் ஓதுகிறார்களோ அந்தளவுக்கு பயன் கிடைக்கும். திருக்குர்ஆனை எப்படி ஓத வேண்டும்? அதை ஓதுவதற்கு அடிப்படை முன் நிபந்தனைகள் என்ன? ஓதுவதன் விதிமுறைகள் என்னென்ன? கூட்டாக ஓதுவதன் தேவை என்ன? என்பன போன்ற தலைப்புகளில் திருக்குர் ஆன் பாதையில் வாழ்வியல் பயணம் குறித்த நுட்பமான செய்திகளை இந்த நூலில் குர்ரம் முராத் எழுதியுள்ளார். இதை சேயன் இப்ராகீம் அழகிய முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 22/7/2015.
—-
ஹையா ஹைதராபாத், அமுதா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ.
உரத்த சிந்தனை உறுப்பினர்கள் ஹைதராபாத்துக்கு சுற்றுலா சென்று விட்டுத் திரும்பிய அனுபவத்தை இந்த நூலில் வர்ணிக்கிறார், அமுதா பாலகிருஷ்ணன். நகைச்சுவையோடு எழுதுவது இவருக்கு கைவந்த கலை. எனவே, புத்தகத்தைக் கையில் எடுத்தால், படித்து முடிக்கும் வரை நேரம் போவதே தெரியவில்லை. நன்றி: தினத்தந்தி, 22/7/2015.