மல்லிகைபூ

மல்லிகைபூ, ஞா.சிவகாமி, பூம்புகார் பதிப்பகம், விலை 50ரூ. தலைமைச் செயலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய ஞா.சிவகாமி எழுத்துறையிலும் முத்திரை பதித்தவர். அவர் எழுதியுள்ள மல்லிகைப்பூ என்ற இந்தப் புத்தகத்தில், 25 சிறுகதைகள் அடங்கியுள்ளன. எல்லாமே மனதைத் தொடும் கதைகள். நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

பூர்ணிமா கவிதைகள்

பூர்ணிமா கவிதைகள், டாக்டர் கோ. இளங்கோவன், பூர்ணிமா பதிப்பகம், விலை 150ரூ. டாக்டர் கோ. இளங்கோவன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. ‘வானம் சிரித்தால் மழையாகும். ஆழ் கடல் சிரித்தால் அலையாகும். அலைகள் சிரித்தால் நுரையாகும்”  என்பன போன்ற மனம் விரும்பும் கவிதைகள் உள்ளன. பளபளப்பான காகிதத்தில், வண்ணப் படங்கள் கண்ணைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 27/1/2016.   —- மலர்ந்த வாழ்வு சிறுகதைகள், மா.செ. மாயதேவன், மா. ராமையா, ராமநாதன் பதிப்பகம், விலை 60ரூ. மலர்ந்த வாழ்வு, ரத்த தானம், கூண்டுக்கிளி மற்றும் உடைந்த […]

Read more

களப்பணியில் கம்யூனிஸ்டுகள்

களப்பணியில் கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 200ரூ. எந்த ஒரு அரசியல் கட்சியும், தொண்டர்கள் சிந்திய வியர்வை அந்த தலைவர் மீது விழுந்த பன்னீர் என்ற முறையில் கட்சியை பெரிதும் வளர்க்கும்.ஆனால் தலைவர்களை போற்றி வணங்கும் அரசியல் உலகம் தொண்டர்களை பற்றி நினைப்பதில்லை. அதற்கு நேர்மாறாக தொண்டர்களின் ரத்த வியர்வையால் வளர்ந்ததுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்பதை மறக்காத கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தமிழ்நாடு முழுவதிலும் கட்சிக்காக பல போராட்டங்களில் […]

Read more

இவள் நெருப்புக்கு இணையானவள்

இவள் நெருப்புக்கு இணையானவள், ஞா. சிவகாமி, மணிமேகலை பிரசுரம், பக். 136, விலை 100ரூ. இத்தனை சிறிய நாவலில், எத்தனை எத்தனை விஷயங்களைப் பற்றி ஆசிரியை பேசுகிறார் என்ற பிரமிப்பு உண்டாகிறது. வாழ்க்கையில் பலதரப்பட்ட அனுபவங்களை இவர் பெற்றிருப்பதால், ஒவ்வொரு தனிப்பட்ட அனுபவத்தையும், ஒவ்வொரு அத்தியாயங்களாக்கி, இந்த நாவலைச் செய்திருக்கிறார். பீக் ஹவர் பஸ் பயண அனுபவம், லஞ்ச ஊழல்கள், ஜாதி வேற்றுமைகள், முதியோர் இல்லத்தில் அவதியுறும் முதியவர்கள் என, பல பிரச்னைகளை இந்த நாவலில் அலசுகிறார். இவர் தலைமைச் செயலகத்தில் பணியில் இருந்தவர் […]

Read more

மீஸான் கற்களின் காவல்

மீஸான் கற்களின் காவல், பீ.கே. பாறக்கடவு, தமிழில்-தோப்பில் முஹம்மதுமீரான், அடையாளம், 1205/1, கரூப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, பக். 60, விலை 50ரூ. கேரளத்தின் பிரபல எழுத்தாளரான பீ.கே. பாறக்கடவு எழுதிய மீஸான் கற்களின் காவல் என்ற இச்சிறிய நாவல் உலகிலேயே மிகச் சிறிய நாவலெனப் புகழ்பெற்றது. இதுதான் இவரது முதல் நாவலாகும். கடந்த கால கதைகளை இக்கதையின் நாயகன் சுல்தான், நாயகி ஷஹன் ஸாதாவுக்குக் கூறுவதாக அமைந்திருக்கிறது இந்நாவல். ஊரில் வெள்ளம் வந்தபோது பள்ளிவாசல் காஸியார் போடும் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வெள்ளம் வடிவது, […]

Read more

பால்பண்ணைத் தொழில்கள்

பால்பண்ணைத் தொழில்கள், முனைவர் ஓ.ஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், எண்-100, லாடிஸ் பிரிட்ஜ் ரோடு, சென்னை 20, விலை 120ரூ. கிராம மக்களின் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் தொழில்களில், பால் பண்ணைத் தொழில் முக்கியமானது. இத்தொழில் சிறக்க வங்கிக் கடன் உதவி, அரசு மானியங்கள், அவற்றை பெறும் வழிகள் ஆகியவற்றை ஆசிரியர் விளக்கி இருக்கிறார். பாலைக் கறக்க இயந்திரம் வசதியானது ஏன், பாலைப் பாதுகாக்க குளிரூட்டி அமைக்க ஆகும் செலவு, அதற்கான வழிமுறைகள் என்று, இத்தொழில் குறித்த பல்வேறு தகவல்கள் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.   […]

Read more

கொட்டாரம்

கொட்டாரம்,  நீல பத்ம நாபன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-6.html என்னைப் போல் இருவர், ரவுத்திரம், பகை, நொண்டிப்புறா, பூஜை அறை, கொட்டாரம் என்ற 6 சிறுகதைகளின் தொகுப்பு நூல். வாசகனின் வாசிப்புக்கேற்ப ஊக நிலையைப் படரவிடுவது நூலாசிரியரின் பண்பாகத் திகழ்கிறது. அது வாசக மகிழ்வைப் பெருக்கிடும் சூழலுக்கு வலுவூட்டுகிறது. நீல பத்ம நாபனின் மொழி நடை, சுகமான சிறுகதை தொகுப்பை சுவைக்கலாம்.   —– […]

Read more