பூர்ணிமா கவிதைகள்
பூர்ணிமா கவிதைகள், டாக்டர் கோ. இளங்கோவன், பூர்ணிமா பதிப்பகம், விலை 150ரூ.
டாக்டர் கோ. இளங்கோவன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. ‘வானம் சிரித்தால் மழையாகும். ஆழ் கடல் சிரித்தால் அலையாகும். அலைகள் சிரித்தால் நுரையாகும்” என்பன போன்ற மனம் விரும்பும் கவிதைகள் உள்ளன. பளபளப்பான காகிதத்தில், வண்ணப் படங்கள் கண்ணைக் கவர்கின்றன. நன்றி: தினத்தந்தி, 27/1/2016.
—-
மலர்ந்த வாழ்வு சிறுகதைகள், மா.செ. மாயதேவன், மா. ராமையா, ராமநாதன் பதிப்பகம், விலை 60ரூ.
மலர்ந்த வாழ்வு, ரத்த தானம், கூண்டுக்கிளி மற்றும் உடைந்த உள்ளம் ஆகிய தலைப்புகளில் தொகுக்கப்பட்ட சிந்திக்க தூண்டும் சிறுகதை தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.
—-
தோழர் ஆர். நல்லகண்ணு, ஞா. சிவகாமி, மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ.
கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவராக இருப்பினும், மாற்றுக் கட்சியினரின் நல்மதிப்பைப் பெற்றவர் ஆர். நல்லக்கண்ணு. அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக எழுதியுள்ளார் ஞா. சிவகாமி. நன்றி: தினத்தந்தி, 27/1/2016.