சொல்வேட்டை
சொல்வேட்டை, நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை 125ரூ.
தமிழுக்குப் புதுசொற் செல்வம் தேடிய ஓர் இலக்கியப் பயணம்! தமிழ்மொழியில் புதிய சொற்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனியாக ஒரு முத்திரை பதித்து உள்ளார் நூசிரியர் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன். புதிய விஞ்ஞான படைப்புகள் எடுத்துக்காட்டாக டிஜிடல், பென் ட்ரைவ், ஆன்டெனா போன்ற இவற்றக்கெல்லாம் என்ன தமிழ் பெயர் பயன்படுத்துவது? என்று தெரியாமல், ஆங்கில பெயரையே எல்லோரும் பயன்படுத்தி வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே உள்ள பல ஆங்கில சொற்களுக்கும் தமிழ் வார்த்தை இல்லாமல் ஆங்கில சொற்களையே பயன்படுத்தி வந்த சூழ்நிலை இருந்தது. அந்த குறையெல்லாம் போக்க 53 ஆங்கில சொற்களுக்கும் ‘தித்திக்கும்’ தமிழில் நீதியரசர், புதிய சொற்களை கண்டுபிடித்து அதை விளக்கி உள்ள நூல்தான் சொல் வேட்டை. குறிப்பாக ‘அப்கோர்ஸ்‘ என்ற ஆங்கில வார்த்தைக்கு ‘ஜயத்திற்கிடமின்றி ஆம்’ என்ற அருமையான தமிழ் சொல். அதேபோல் ‘பென் ட்ரைவ்’ என்னும் ஆங்கில சொல்லுக்கு ‘தரவகக்கோல்’ என்ற வார்த்தையையும் கொடுத்து இருக்கிறார். இந்த மொழிபெயர்ப்புகளை, அரசின் ஆட்சி சொல் அகராதி உள்பட அனைத்து நூல்களிலும் இடம் பெற செய்து, பேச்சு வழக்குக்கும் கொண்டு வர வேண்டும். நன்றி: தினத்தந்தி, 27/1/2016.