களப்பணியில் கம்யூனிஸ்டுகள்
களப்பணியில் கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 200ரூ.
எந்த ஒரு அரசியல் கட்சியும், தொண்டர்கள் சிந்திய வியர்வை அந்த தலைவர் மீது விழுந்த பன்னீர் என்ற முறையில் கட்சியை பெரிதும் வளர்க்கும்.ஆனால் தலைவர்களை போற்றி வணங்கும் அரசியல் உலகம் தொண்டர்களை பற்றி நினைப்பதில்லை. அதற்கு நேர்மாறாக தொண்டர்களின் ரத்த வியர்வையால் வளர்ந்ததுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்பதை மறக்காத கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தமிழ்நாடு முழுவதிலும் கட்சிக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் இருந்தபோதும், நிலைகுலையாத, உறுதியில், தளராத தொண்டர்களை தேடிப்பிடித்து அவர்களின் அனுபவங்களை புகைப்படங்களுடன் வெளியிட்டு அவர்களுக்கு புகழ் சேர்க்கும் நூல்தான் அவர் எழுதியுள்ள களப்பணியில் கம்யூனிஸ்டுகள் என்ற நூல் ஆகும். தொண்டர்களின் களப்பணி, இன்றைய தொண்டர்களுக்கும், எதிர்காலத்துக்கும் வழிகாட்டும் வழியாக அமைந்துள்ள காலத்தால் என்றென்றைக்கும் மறையாத அரிய நூலாக இந்த நூல் இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 11/2/2015.
—-
ஒரு குயில் தமிழ் பாடுகிறது, ஞா. சிவகாமி, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 60ரூ.
ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஞா. சிவகாமி எழுதிய சின்னச் சின்ன கவிதைகள் கொண்ட நூல். நன்றாகத்தான் சொன்னீர்கள், நல்ல தமிழில் ‘இல்லாள்’ என்று, எதுமே இங்கு இல்லாதவள் இன்று ‘இல்லாள்’தான். -என்பது போன்ற கருத்துள்ள கவிதைகள். கவிதைகளைப் படிப்பவர்கள், ஒரு குயில் தமிழ் பாடுகிறது என்ற தலைப்பு சரியானது என்று ஒப்புக்கொள்வார்கள். நன்றி: தினத்தந்தி, 11/2/2015.