மீஸான் கற்களின் காவல்

மீஸான் கற்களின் காவல், பீ.கே. பாறக்கடவு, தமிழில்-தோப்பில் முஹம்மதுமீரான், அடையாளம், 1205/1, கரூப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, பக். 60, விலை 50ரூ. கேரளத்தின் பிரபல எழுத்தாளரான பீ.கே. பாறக்கடவு எழுதிய மீஸான் கற்களின் காவல் என்ற இச்சிறிய நாவல் உலகிலேயே மிகச் சிறிய நாவலெனப் புகழ்பெற்றது. இதுதான் இவரது முதல் நாவலாகும். கடந்த கால கதைகளை இக்கதையின் நாயகன் சுல்தான், நாயகி ஷஹன் ஸாதாவுக்குக் கூறுவதாக அமைந்திருக்கிறது இந்நாவல். ஊரில் வெள்ளம் வந்தபோது பள்ளிவாசல் காஸியார் போடும் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வெள்ளம் வடிவது, […]

Read more

பால்பண்ணைத் தொழில்கள்

பால்பண்ணைத் தொழில்கள், முனைவர் ஓ.ஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், எண்-100, லாடிஸ் பிரிட்ஜ் ரோடு, சென்னை 20, விலை 120ரூ. கிராம மக்களின் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் தொழில்களில், பால் பண்ணைத் தொழில் முக்கியமானது. இத்தொழில் சிறக்க வங்கிக் கடன் உதவி, அரசு மானியங்கள், அவற்றை பெறும் வழிகள் ஆகியவற்றை ஆசிரியர் விளக்கி இருக்கிறார். பாலைக் கறக்க இயந்திரம் வசதியானது ஏன், பாலைப் பாதுகாக்க குளிரூட்டி அமைக்க ஆகும் செலவு, அதற்கான வழிமுறைகள் என்று, இத்தொழில் குறித்த பல்வேறு தகவல்கள் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.   […]

Read more

கொட்டாரம்

கொட்டாரம்,  நீல பத்ம நாபன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. To buy this Tamil book online – https://www.nhm.in/shop/100-00-0001-009-6.html என்னைப் போல் இருவர், ரவுத்திரம், பகை, நொண்டிப்புறா, பூஜை அறை, கொட்டாரம் என்ற 6 சிறுகதைகளின் தொகுப்பு நூல். வாசகனின் வாசிப்புக்கேற்ப ஊக நிலையைப் படரவிடுவது நூலாசிரியரின் பண்பாகத் திகழ்கிறது. அது வாசக மகிழ்வைப் பெருக்கிடும் சூழலுக்கு வலுவூட்டுகிறது. நீல பத்ம நாபனின் மொழி நடை, சுகமான சிறுகதை தொகுப்பை சுவைக்கலாம்.   —– […]

Read more