நேரு சொன்ன நூறு

நேரு சொன்ன நூறு, திருக்குடந்தை பதிப்பகம், விலை 50ரூ. நவஇந்தியாவை உருவாக்கியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. சுதந்திரப் போராட்டத்தின் போது 10 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். 17 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியவர். அவர் நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கூறிய 100 விஷயங்கள், இந்த நூலில் உள்ளன. அண்மையில் காலமான திரைப்பட இயக்குனர் முக்தா சீனிவாசன் இதை எழுதியுள்ளார். சிறிய நூல்தான். ஆனால் சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி.   இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026856.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

புயலிலே ஒரு தோணி

புயலிலே ஒரு தோணி, ஜி.அசோகன், விலை 40ரூ. ப. சிங்காரம் எழுதிய “புயலிலே ஒரு தோணி” தமிழின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்றென போற்றப்படுகிறது. குடும்ப நாவல். தீபாவளி சிறப்பிதழில் அந்நாவல் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 1/11/2017.   —-   பொன்மொழிகள், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 40ரூ. ராஜாஜி, பெரியார், கலைஞர் மு. கருணாநிதி ஆகியோருடைய பொன்மொழிகள் கொண்ட புத்தகம். தொகுத்தவர் முக்தா சீனிவாசன். நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

1000 செய்திகள்

1000 செய்திகள், முக்தா வீ. சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், பக். 80, விலை 100ரூ. இது முக்தா வீ. சீனிவாசனின் 140வது புத்தகம். இதில் இல்லாத தகவல்களே இல்லை என்பதுபோல், நம் ஊர் பாரதி பற்றிய தகவல்கள் தொடங்கி, சாக்ரடீஸ், அரிஸ்டாடில் போன்றோரின் கருத்துக்கள், அறிவியலாளர்கள், நடிகர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், இசைஞானிகள், சாதனையாளர்கள், ஆன்மிகவாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. -இரா. மணிகண்டன் நன்றி: குமுதம், 7/9/2016.

Read more

தமிழர் சமூக வாழ்வு

தமிழர் சமூக வாழ்வு, இர. ஆலாலசுந்தரம், தமிழில் ம. இளங்கோவன், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 260ரூ. தமிழர்களின் மூத்த குடிகள் – மூதாதையர் பற்றிய அடையாளங்களை இந்த நூல் வாயிலாக அறிந்து கொள்ளும் வகையில் பல அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- 1000 செய்திகள், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. பட அதிபர் “முக்தா” சீனிவாசன், 1000 செய்திகளை (தகவல்கள்) தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டு, ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். 2-வது, 3-வது , […]

Read more

1000 செய்திகள் (பாகம் 1)

1000 செய்திகள் (பாகம் 1), முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. 1000 செய்திகளை (சிறிய துணுக்குகள்) 4 புத்தகங்களாக வெளியிட ‘முக்தா’ சீனிவாசன் முடிவு செய்து, அதில் முதல் புத்தகத்தை (247 செய்திகளுடன்) கொண்டு வந்துள்ளார். பாராட்டத்தக்க முயற்சி. படங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நலம். உதாரணமாக 25-வது பக்கத்தில் நாமத்துடன் காட்சியளிப்பவர் எஸ்.ஏ.பி. அல்ல. நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Read more

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள்

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள், எஸ். ஜெகத் ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம், பக். 200, விலை 130ரூ. தேசியக் கவிஞர் தாகூரின் சிந்தனைகளில் இருந்து மணிமணியானவற்றை பொறுக்கி எடுத்து தொகுத்துள்ள நூல். படிக்க சுவாரஸ்யம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- நமது சங்கீத வித்துவான்கள், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. எம்.எஸ். சுப்புலட்சுமி, ஜி.என். பாலசுப்பிரமணியம், டி.கே. பட்டம்மாள், அரியகுடி ராமானுஜ அய்யங்கார், வீணை எஸ். பாலசந்தர், என்.சி. வசந்தகோகிலம், எம்.எம். தண்டபாணி தேசிகர் உள்பட 17 சங்கீத வித்துவான்கள் […]

Read more

ஓவியனின் கதை

ஓவியனின் கதை, ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், தஞ்சை, விலை 170ரூ. ஓவியக் கல்லூரியில் பயின்று தேர்வு பெற்ற ப. தங்கம், படக்கதைகள் வரைவதில் முத்திரை பதித்தவர். அவர் எழுத்தாளராகவும் இருப்பதால், படக்கதைகளுக்கான கதையை, அவரே சிறந்த முறையில் வடிவமைக்கக்கூடியவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டே ஓவியங்களையும் வரைந்துவந்தார். எதிர்நீச்சல் போட்டு முன்னேறியவர். எனவே, அவர் வாழ்க்கை வரலாற்றில் நவரசங்களும் நிறைந்துள்ளன. சிறந்த நாவலைப் படித்த திருப்தியைத் தருகிறது, இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- நம் நாடு கண்ட நல்லோர் […]

Read more

கல்லாடம்

கல்லாடம், முனைவர் பழ. முத்தப்பன், உமா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையாரின் 100 துறைகளைத் தேர்ந்தெடுத்து, அதன் பொருள் அமைப்பினைக் கொண்டு பாடப்பட்ட நூல். பாடியவர் கல்லாடர். இதனால் இந்த நூலுக்கு கல்லாடம் என்ற பெயர் வந்தது. எட்டுத்தொகை நூலான கலித்தொகைக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அகப்பொருள் இலக்கியம் கல்லாடம் ஆகும். பாடல்களில் இடம் பெற்றிருக்கும் சொற்களும், தொடர் அமைப்புகளும் சங்க இலக்கிய மரபையொட்டித் திகழ்கின்றன. கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே என்ற பழமொழி, இந்த நூலின் சிறப்பைப் பறைசாற்றுகிறது. இந்தப் பாடல்களுக்கு முனைவர் […]

Read more

நமது நடிப்புக்கலை செல்வங்கள்

நமது நடிப்புக்கலை செல்வங்கள், திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. சிறந்த டைரக்டரும், பட அதிபருமான முக்தா சீனிவாசன், சினிமா பற்றி புத்தகங்கள் எழுதி வருகிறார். இப்போது நமது நடிப்புக்கலை செல்வங்கள் பாகம் 1 என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முதல் பொற்காலத்தை உருவாக்கிய நடிகர் நடிகைகள் பற்றிய, சுருக்கமான வாழ்க்கை வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்த பாகவதரும், என்.எஸ். கிருஷ்ணனும் லண்டனில் இருந்த பிரிவி கவுன்சிலுக்கு (வெள்ளையர் ஆட்சியின்போதுஇதுதான் உச்சநீதிமன்றம்) மெர்சி பெட்டிஷன் […]

Read more

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும்

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும், ரவிக்குமார், மணற்கேணி, சென்னை, விலை 30ரூ. மதுவிலக்கு-இன்னொரு கோணம் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வாசகங்களை மதுக்குடிப்பியில் அச்சிடுவதோடு கடமை முடிந்துவிட்டது என்று அரசுகள் நினைக்கின்றன. இந்நிலையில் மதுவிலக்கை வலியுறுத்தித் தமிழகத்தில் வெவ்வேறு தரப்பிலிருந்தும் உறுதியான குரல்கள் எழுகின்றன. இச்சூழ்நிலையில் மதுப்பழக்கத்தால் உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுபவர்களான அடித்தட்டு,தலித் மக்கள் நோக்கிலிருந்து மதுவிலக்கை வலியுறுத்திப் பேசும் சிறுகட்டுரைகள் இவை. மதுப்பழக்கத்தை கீழ்மக்களோடு தொடர்புபடுத்தும் மேல்தட்டு வர்க்கக் கற்பிதங்களையும் இக்கட்டுரைகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடியை மாற்றுப் பண்பாடாக அணுகும் போக்கையும் ரவிக்குமார் […]

Read more
1 2