அ-சுரர்களின் அரசியல் (தலித்துகளும் மதுவிலக்கும்)
அ-சுரர்களின் அரசியல் (தலித்துகளும் மதுவிலக்கும்), ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், பக். 40, விலை 30ரூ. கள் வேண்டுமா, வேண்டாமா? தமிழ்நாட்டு மக்கள், மதுவுக்காக 2013ம் ஆண்டில் செலவழித்த தொகையில், ஐந்து லட்சம் வீடுகள் கட்டியிருக்கலாம். 200 மருத்துவக் கல்லுரிகளை உருவாக்கியிருக்கலாம். 10 ஆயிரம் பள்ளிகளைக் கட்டியிருக்கலாம் என்கிறார் நூலாசிரியர் (பக். 5). அதே ஆண்டில் சிகரெட், சுருட்டு, பீடிக்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு, அந்தப் பணத்தில் வேறு சமூக நலப்பணிகளையும் செய்திருக்கலாம் அல்லவா என்ற கேள்வி நம்முடையது. குடி, சிகரெட்டை விட்டு விடுவோம். […]
Read more