கந்தன் கதை

கந்தன் கதை, ரவிக்குமார், அவனருளாலே பதிப்பகம், விலைரூ.450. தமிழ்க் கடவுள் கந்தனை புவி மாந்தரோடு தொடர்புபடுத்தி கற்பனை கலந்து எழுதிய தொகுப்பு நுால். கற்பனை கதையமைப்பும், காட்சிகளும் சேர்க்கப்பட்ட நெடிய புதினம். கந்த புராணத்தை அடிப்படையாகக் கொண்டு, பக்தித் திரைப்படங்களில் காட்டப்பட்ட வானவர் காட்சியமைப்புகளும், கதைகளும் வரவேற்பு பெற்றன. இந்த பின்னணியில் புதிய புனைவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. சிவன், பார்வதி, ரதி, மாரன், இந்திரன், குமரன், சூரபத்மன், அகத்தியர், திலோத்தமை என கதாபாத்திரங்களின் உரையாடல்களோடு பயணிக்கிறது கதை. தற்கால மொழி நடையில் அமைந்துள்ளது. பழனி போகநாதர் […]

Read more

ஆயிரம் பூக்கள் கருகட்டும்

ஆயிரம் பூக்கள் கருகட்டும், ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், விலை 120ரூ. தமிழ் ஆய்வுலகம் ஏன் தூங்கிவழிகிறது? சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆய்வறிஞர்கள் தமிழ்ச் சூழலைப் பற்றி எழுதும் கட்டுரைகள் கல்விப்புலத்துக்குள்ளேயே கவனம்பெறுவதில்லை. இந்தச் சூழலில், அரசியல் தளத்தில் முழுநேரமாக இயங்கும் செயல்பாட்டாளரான ரவிக்குமார் அத்தகைய சில கட்டுரைகளின் மீது எழுப்பியிருக்கும் விவாதங்கள் இவை. டெல்லி பல்கலைக்கழகத்தால் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட ஏ.கே.ராமானுஜனின் ‘முந்நூறு ராமாயணங்கள்’ கட்டுரையைப் பற்றிய அறிமுகத்தோடு அதை எதிர்ப்பதற்குப் பின்னுள்ள அரசியலைக் குறித்தும் விவாதிக்கிறது முதல் கட்டுரை. ராமாயணத்தின் பல்வேறு பிரதிகளுக்கு […]

Read more

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், விலை 150ரூ. மதுவெறியை விட ஆபத்தானது மதவெறி! ‘உலகில் எங்கெல்லாம் வகுப்புவாதம் மேலாதிக்கம் பெற்றிருக்கிறதோ, அங்கெல்லாம் அது நாடாளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்துக்கட்டிவிட்டது. அந்த நாடுகள் யாவும் உள்நாட்டுப்போரில் சிதைந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றன அதே பாதையில் இந்தியாவையும் இழுத்துச் செல்வதுதான் இங்குள்ள வகுப்புவாத சக்திகளின் திட்டம். அவர்கள் பாகிஸ்தானை எதிரியாகச் சித்திரித்துக்கொண்டிருந்தாலும் அவர்களது நடவடிக்கை அரசியல் ரீதியாக இந்தியாவை இன்னொரு பாகிஸ்தானாக மாற்றுவதற்கே வழிவகுக்கும்’ என்ற முன்னுரையைப் படிக்கும்போதே பதற்றமாக இருக்கிறது. புத்தகமாக இடம்பெற்றுள்ள 44 கட்டுரைகளில் 8 […]

Read more

அ-சுரர்களின் அரசியல் (தலித்துகளும் மதுவிலக்கும்)

அ-சுரர்களின் அரசியல் (தலித்துகளும் மதுவிலக்கும்), ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், பக். 40, விலை 30ரூ. கள் வேண்டுமா, வேண்டாமா? தமிழ்நாட்டு மக்கள், மதுவுக்காக 2013ம் ஆண்டில் செலவழித்த தொகையில், ஐந்து லட்சம் வீடுகள் கட்டியிருக்கலாம். 200 மருத்துவக் கல்லுரிகளை உருவாக்கியிருக்கலாம். 10 ஆயிரம் பள்ளிகளைக் கட்டியிருக்கலாம் என்கிறார் நூலாசிரியர் (பக். 5). அதே ஆண்டில் சிகரெட், சுருட்டு, பீடிக்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு, அந்தப் பணத்தில் வேறு சமூக நலப்பணிகளையும் செய்திருக்கலாம் அல்லவா என்ற கேள்வி நம்முடையது. குடி, சிகரெட்டை விட்டு விடுவோம். […]

Read more

கடல் கிணறு

கடல் கிணறு (சிறுகதைகள்), ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 79, விலை 60ரூ. கேள்விகளை எழுப்பும் கதைகள் அடக்குமுறையின் மாமிசத்தைப் பிய்த்துத் துப்பும் கதைகள்: வாசிப்பதோடு விவாதிக்கவும் வேண்டியவை. நிர்ப்பந்தங்களுக்கு அப்பால் வாழ்வை அதன் மங்கலான பிம்பங்களில் இருந்து பதிவு செய்வதாய் எழுதப்பட்டிருக்கும் ஒன்பது கதைகளைக் கொண்டிருக்கும் ரவிக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பான கடல் கிணறு இந்தக் காலகட்டத்தில் வாசிப்பதோடு விவாதிக்கப்படவும் வேண்டிய புத்தகம். மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் முக்கியமான ஆக்கங்களைத் தந்துள்ள ரவிக்குமாரின் இந்த கதைகள் பெரும்பாலும் […]

Read more

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும்

அ-சுரர்களின் அரசியல் தலித்துகளும் மதுவிலக்கும், ரவிக்குமார், மணற்கேணி, சென்னை, விலை 30ரூ. மதுவிலக்கு-இன்னொரு கோணம் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற வாசகங்களை மதுக்குடிப்பியில் அச்சிடுவதோடு கடமை முடிந்துவிட்டது என்று அரசுகள் நினைக்கின்றன. இந்நிலையில் மதுவிலக்கை வலியுறுத்தித் தமிழகத்தில் வெவ்வேறு தரப்பிலிருந்தும் உறுதியான குரல்கள் எழுகின்றன. இச்சூழ்நிலையில் மதுப்பழக்கத்தால் உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுபவர்களான அடித்தட்டு,தலித் மக்கள் நோக்கிலிருந்து மதுவிலக்கை வலியுறுத்திப் பேசும் சிறுகட்டுரைகள் இவை. மதுப்பழக்கத்தை கீழ்மக்களோடு தொடர்புபடுத்தும் மேல்தட்டு வர்க்கக் கற்பிதங்களையும் இக்கட்டுரைகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. குடியை மாற்றுப் பண்பாடாக அணுகும் போக்கையும் ரவிக்குமார் […]

Read more

கடல் கிணறு

கடல் கிணறு, ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ. மௌனமாய் மரணத்தைப் பேசும் கதைகள் கடல் கிணறு தொகுப்பில் இருக்கிற சிறுகதைகள் வழக்கமான தமிழ்க் கதைகள் அல்ல. மனதின் வலியிலிருந்து எழுதப்பட்ட, சமூக நிகழ்வுகளின் கொடூரங்கள் தந்த மன அழுத்தத்திலிருந்து எழுதப்பட்ட கதைகள். அரசியல் கதைகள் என்று தோற்றம் தருகிற உண்மை அறிதல், எட்டாம் தூக்கம், ழ, வார்த்தைகள் போன்ற கதைகளில் முக்கியமான பாத்திரம் அரசியல் அல்ல. மரணம்தான். அதைவிடவும் மௌனம்தான் எல்லாக் கதைகளிலும் பிரதான பாத்திரம். தொகுப்பின் அநேகக் கதைகளில் மரணம் […]

Read more