ஓவியனின் கதை
ஓவியனின் கதை, ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், தஞ்சை, விலை 170ரூ.
ஓவியக் கல்லூரியில் பயின்று தேர்வு பெற்ற ப. தங்கம், படக்கதைகள் வரைவதில் முத்திரை பதித்தவர். அவர் எழுத்தாளராகவும் இருப்பதால், படக்கதைகளுக்கான கதையை, அவரே சிறந்த முறையில் வடிவமைக்கக்கூடியவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டே ஓவியங்களையும் வரைந்துவந்தார். எதிர்நீச்சல் போட்டு முன்னேறியவர். எனவே, அவர் வாழ்க்கை வரலாற்றில் நவரசங்களும் நிறைந்துள்ளன. சிறந்த நாவலைப் படித்த திருப்தியைத் தருகிறது, இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.
—-
நம் நாடு கண்ட நல்லோர் நால்வர், திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார், வள்ளல் டாக்டர் ஆர்.எம். அழகப்ப செட்டியார், இசை அரசி எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார் முக்தா வீ. சீனிவாசன். படங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 5/8/2015.