கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை, ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ. உருளும் காலம் உறையும் அற்புதங்களைச் செய்பவை புத்தகங்கள். சித்திரங்கள் படிக்கிற அனுபவத்தை இன்றைய குழந்தைகள் இழந்து வருவது தலைமுறை துயரம். ஏராளமான சேனல்களும், கணினிகளும் திரிக்கும் ஒளிக்கயிறுகளால் தாவிக் குதிக்கும் குழந்தைகள் சீக்கிரமே தங்களுக்கான தேவ உலகத்தை இழந்துவிடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் புழுதி வாசத்தையும், புத்தக வாசத்தையும் அறிமுகப்படுத்துவது நமது முதல் கடமை. சிறியோர் முதல் பெரியோர் வரை பார்க்க, படிக்கத் தக்கதாக கல்கியின் ‘பொன்னியின் […]

Read more

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் (படக்கதை), ஓவியர் ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ. “கல்கி”யின் “பொன்னியின் செல்வன்” சரித்திர நாவல் மீது தீராக் காதல் கொண்டவர் ஓவியர் ப. தங்கம். அந்த காவியத்தை சித்திரக் கதையாக வடிவமைத்து, புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். இப்போது இரண்டாவது புத்தகம் வெளிவந்துள்ளது. பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்களை ஓவியர் மணியம் எப்படி உருவாக்கி உயிரோவியங்களாக நடமாட விட்டாரோ, அதே பாணியில் ஓவியர் தங்கமும் தன் முழுத்திறமையையும் பயன்படுத்தி இந்த படக்கதையை உருவாக்கியுள்ளார். படங்களும், வசனங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. […]

Read more

ஓவியனின் கதை

ஓவியனின் கதை, ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், தஞ்சை, விலை 170ரூ. ஓவியக் கல்லூரியில் பயின்று தேர்வு பெற்ற ப. தங்கம், படக்கதைகள் வரைவதில் முத்திரை பதித்தவர். அவர் எழுத்தாளராகவும் இருப்பதால், படக்கதைகளுக்கான கதையை, அவரே சிறந்த முறையில் வடிவமைக்கக்கூடியவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிக்கொண்டே ஓவியங்களையும் வரைந்துவந்தார். எதிர்நீச்சல் போட்டு முன்னேறியவர். எனவே, அவர் வாழ்க்கை வரலாற்றில் நவரசங்களும் நிறைந்துள்ளன. சிறந்த நாவலைப் படித்த திருப்தியைத் தருகிறது, இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- நம் நாடு கண்ட நல்லோர் […]

Read more