பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் (படக்கதை), ஓவியர் ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ. “கல்கி”யின் “பொன்னியின் செல்வன்” சரித்திர நாவல் மீது தீராக் காதல் கொண்டவர் ஓவியர் ப. தங்கம். அந்த காவியத்தை சித்திரக் கதையாக வடிவமைத்து, புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார். இப்போது இரண்டாவது புத்தகம் வெளிவந்துள்ளது. பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்களை ஓவியர் மணியம் எப்படி உருவாக்கி உயிரோவியங்களாக நடமாட விட்டாரோ, அதே பாணியில் ஓவியர் தங்கமும் தன் முழுத்திறமையையும் பயன்படுத்தி இந்த படக்கதையை உருவாக்கியுள்ளார். படங்களும், வசனங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. […]
Read more