கல்கியின் பொன்னியின் செல்வன்

கல்கியின் பொன்னியின் செல்வன், நாடக வடிவம், சக்தி வெங்கடாசலம் வயிரவன், முல்லை பதிப்பகம், பக். 296, விலை 200ரூ. அமரர் கல்கியின் படைப்புகளில் தலைசிறந்தது ‘பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுக் கதை. அதன் இலக்கிய ஆழமும், கற்பனை வீச்சும், வண்ணத் தமிழும் படிப்பவர்களை பரவசப்படுத்தும். 2400 பக்கங்களைக் கொண்ட 5 பாகங்களான அந்த நாவலை, 296 பக்கங்களில் நாடக வடிவில் தந்துள்ளார் இந்நூலாசிரியர். இவர் இயல், இசை, நாடகத்தின் மீது பற்றுக் கொண்டு, தனது கல்லூரி நாட்களிலேயே நாடகங்களை எழுதி இயக்கும் ஆற்றலைப் பெற்றவர். […]

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்

கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ், நிலா காமிக்ஸ், வி 145ரூ. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனைப் பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அந்த வரலாற்றுப் புதினத்தை, அழகழகான படங்கள், சுவாரஸ்யமான டயலாக்குகளுடன் படக்கதையாகத் தரும் வித்தியாசமான முயற்சி. மாதம் இருமுறை என அத்தியாயங்களின் தொடர் வெளியீடாக வருமாம். காமிக்ஸ் பிரியர்களைக் கண்டிப்பாகக் கவரும். நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை, ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ. உருளும் காலம் உறையும் அற்புதங்களைச் செய்பவை புத்தகங்கள். சித்திரங்கள் படிக்கிற அனுபவத்தை இன்றைய குழந்தைகள் இழந்து வருவது தலைமுறை துயரம். ஏராளமான சேனல்களும், கணினிகளும் திரிக்கும் ஒளிக்கயிறுகளால் தாவிக் குதிக்கும் குழந்தைகள் சீக்கிரமே தங்களுக்கான தேவ உலகத்தை இழந்துவிடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் புழுதி வாசத்தையும், புத்தக வாசத்தையும் அறிமுகப்படுத்துவது நமது முதல் கடமை. சிறியோர் முதல் பெரியோர் வரை பார்க்க, படிக்கத் தக்கதாக கல்கியின் ‘பொன்னியின் […]

Read more