கல்லாடம்
கல்லாடம், முனைவர் பழ. முத்தப்பன், உமா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையாரின் 100 துறைகளைத் தேர்ந்தெடுத்து, அதன் பொருள் அமைப்பினைக் கொண்டு பாடப்பட்ட நூல். பாடியவர் கல்லாடர். இதனால் இந்த நூலுக்கு கல்லாடம் என்ற பெயர் வந்தது. எட்டுத்தொகை நூலான கலித்தொகைக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அகப்பொருள் இலக்கியம் கல்லாடம் ஆகும். பாடல்களில் இடம் பெற்றிருக்கும் சொற்களும், தொடர் அமைப்புகளும் சங்க இலக்கிய மரபையொட்டித் திகழ்கின்றன. கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே என்ற பழமொழி, இந்த நூலின் சிறப்பைப் பறைசாற்றுகிறது. இந்தப் பாடல்களுக்கு முனைவர் பழ. முத்தப்பன், துறை விளக்கம், பாடற்பொருள், விளக்கவுரை, பொற்பொருள் விளக்கம் அளித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 3/6/2015.
—-
அறிஞர்கள் வாழ்வில், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், சென்னை, விலை 120ரூ.
மகாத்மா காந்தி, நேரு, ஹிட்லர், ராஜாஜி, காமராஜர், சார்லி சாப்ளின், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பை எழுதியுள்ளார் முக்தா சீனிவாசன். மொத்தம் 26 கட்டுரைகள் அடங்கியுள்ளன. எம்.ஜி.ஆரின் உயிலும் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 3/6/2015.