கம்பனில் இசைத்தமிழ்

கம்பனில் இசைத்தமிழ், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், உமா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. இயற்பா – இசைப்பா இவற்றிற்குள்ள வேறுபாடு, இசைத்தமிழ் மரபு போன்றவற்றை விரிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். இசைத்தமிழ் மரபு என்னும் வித்து, தொல்காப்பிய காலத்திற்கு முன் விதைக்கப்பட்டு, சங்க காலத்தில் ஆழமாக வேரூன்றி, காப்பிய காலத்தில் முகிழ்ந்து வளர்ந்தோங்கி, கம்பராமாயணத்தில் மலர்ச்சோலையாக மணம் பரப்புகிறது என கூறுகிறார். இன்றைய இசையியலில் வழங்கி வருகிற தாளங்களுக்கான மூலவேர்கள் சங்க இலக்கியங்களில் வெகுவாக காணப்படுகின்றன. பண்டைக்கால இசைத்தமிழ் நூல்களில், 108 தாளங்களும், […]

Read more

அழுவதற்கா பிறந்தோம்?

அழுவதற்கா பிறந்தோம்?, புலவர் மு. சொக்கப்பன், உமா பதிப்பகம், பக். 104, விலை 100ரூ. புதுக்கவிதைகளின் ஆதிக்கம் மிகுந்த இக்கால கட்டத்தில் மரபுக் கவிதைகள் வாயிலாக கோலோச்சியிருக்கிறார் இக்கவிஞர். மரபுக் கவிதைகள் என்றாலும் பெண் சிசுக்கொலை, பெண்மை, புதுச்சட்டம் போன்ற புத்துலக கருத்துக்கள்தான் அதிகம். அதுவும் சொல்ல வந்ததை எழுச்சியுடன் வெண்பா வடிவிலும் அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்த வடிவிலும் படிக்கப் படிக்க உற்சாகம் தரும் வகையில் உள்ளது. ‘துன்பத்தில் துவளாதிரு, உச்சத்தில் மமதை தவிர், மக்களில் பலருக்கு வாழ்வில்லை என்பது விதியெனில் அதை […]

Read more

திருப்புகழ்

திருப்புகழ், வி.எஸ். கிருஷ்ணன், உமா பதிப்பகம், பக். 408, விலை 200ரூ. அருணகிரிநாதர் பெண் பித்தர் அல்லர்! மிக இளம் வயதிலேயே முருக பக்தியில் மூழ்கி, திருப்புகழை ஓதுவதால் ஏற்படும் இன்பத்தையும், ஆன்ம லாபத்தையும் உணர்ந்த இந்த நூலாசிரியர், ஆங்கிலம் மட்டுமே அறிந்திருப்போரும். திருப்புகழின் பெருமையை உணர்ந்து உய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், இந்த நூலை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். திருப்புகழோடு, அருணகிரியார் அருளிச் செய்த கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகிய நூல்களின் அருமையையும், பல கோணங்களில் அலசி ஆராய்ந்து, கட்டுரைகள் எழுதியிருக்கிறார். […]

Read more

பொற்றொடி பங்கனும் பூமகள் கேள்வனும்

பொற்றொடி பங்கனும் பூமகள் கேள்வனும், திருவின் நாயகன் தொகுப்பு, உமா பதிப்பகம், பக். 264, விலை 120ரூ. ராவணனின் பெருமைகளையும், அவனது முறையற்ற செயல்களையும் சைவ, வைணவ நூல்களின் துணையுடன் தொகுப்பாசிரியர் மிக அருமையாக, பதிவு செய்துள்ளார். ராவணன் என்ற சொல்லிற்கு அழுதவன், பிறரை அழவைத்தவன் என்று பொருள் (பக். 9). ராவணன் தவவலிமையால் பெற்ற வரம் (பக். 20), தசமுகன் எனும் பெயரை, ராவணன் எனும் இறவாப் பெயராக சிவபெருமான் ஈந்தது (பக். 38), ராமன் கடல் கடந்து செல்லும் முன்பாக, பிரயோபவேசம் […]

Read more

உதயணகுமார காவியம்

உதயணகுமார காவியம், உமா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. ஐம்பெரும் காப்பியங்கள் போன்ற ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான உதயணகுமார காவியம் சமண காப்பியத்தை குறிப்பது. இது விருத்தப்பாவில் அமைந்தது. ஆறு காண்டங்களில் 367 பாடல்களைக் கொண்டது. அப்பாடல்களுக்கு விளக்கவுரை கொடுத்திருக்கிறார் முனைவர் பழ. முத்தப்பன். நன்றி: தினத்தந்தி, 5/8/2015.   —- திருக்குறள் சீர் ஏழுக்கு ஏழு வியனுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ. இதுவரை திருக்குறளுக்கு அரிய பெரிய சான்றோர்கள் உரை எழுதியுள்ளனர். ஒருவரி உரையும் எழுதியுள்ளனர் சிலர். இன்னும் எளிய […]

Read more

கல்லாடம்

கல்லாடம், முனைவர் பழ. முத்தப்பன், உமா பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையாரின் 100 துறைகளைத் தேர்ந்தெடுத்து, அதன் பொருள் அமைப்பினைக் கொண்டு பாடப்பட்ட நூல். பாடியவர் கல்லாடர். இதனால் இந்த நூலுக்கு கல்லாடம் என்ற பெயர் வந்தது. எட்டுத்தொகை நூலான கலித்தொகைக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அகப்பொருள் இலக்கியம் கல்லாடம் ஆகும். பாடல்களில் இடம் பெற்றிருக்கும் சொற்களும், தொடர் அமைப்புகளும் சங்க இலக்கிய மரபையொட்டித் திகழ்கின்றன. கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே என்ற பழமொழி, இந்த நூலின் சிறப்பைப் பறைசாற்றுகிறது. இந்தப் பாடல்களுக்கு முனைவர் […]

Read more

பணம் விரும்புதே உன்னை

பணம் விரும்புதே உன்னை, டி.ஏ. விஜய், புதிய பறவை பதிப்பகம், பக். 204, விலை 555ரூ. தினமலர் வாரமலரில் தொடராக வெளிவந்து, பின் புத்தக வடிவில் வெளியாகி, பலரது பாராட்டுதல்களை பெற்ற புத்தகம். தற்போது 11வது பதிப்பாக வெளிவந்துள்ளது. பங்கு வர்த்தம் என்றாலே, வேப்பங்காயாக கசக்கும். அதில் புழங்கும் நடைமுறைகள், சொற்கள் ஆகியவை எட்ட இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாத புதிராக இருக்கும். மொத்தத்தில், பலாப்பழ மேல்தோல்போல், பார்வைக்கு கடினமாக காணப்படும் பங்கு வர்த்தகத்தில் பக்குவமாக நுழைந்தால், பணம் என்னும் தேன் சுவை கொண்ட பழத்தை […]

Read more