அழுவதற்கா பிறந்தோம்?

அழுவதற்கா பிறந்தோம்?, புலவர் மு. சொக்கப்பன், உமா பதிப்பகம், பக். 104, விலை 100ரூ.

புதுக்கவிதைகளின் ஆதிக்கம் மிகுந்த இக்கால கட்டத்தில் மரபுக் கவிதைகள் வாயிலாக கோலோச்சியிருக்கிறார் இக்கவிஞர். மரபுக் கவிதைகள் என்றாலும் பெண் சிசுக்கொலை, பெண்மை, புதுச்சட்டம் போன்ற புத்துலக கருத்துக்கள்தான் அதிகம்.

அதுவும் சொல்ல வந்ததை எழுச்சியுடன் வெண்பா வடிவிலும் அறுசீர் விருத்தம், எண்சீர் விருத்த வடிவிலும் படிக்கப் படிக்க உற்சாகம் தரும் வகையில் உள்ளது. ‘துன்பத்தில் துவளாதிரு, உச்சத்தில் மமதை தவிர், மக்களில் பலருக்கு வாழ்வில்லை என்பது விதியெனில் அதை எழுதிடும் இறைவனின் மதியினில் களங்கம் காணீர்‘ என குரல் தருகிறார்.

‘ஏட்டில் இருப்பவை மனிதக் கூட்டில் ஒளியேற்றலையே?’ என அங்கலாய்க்கிறார். மதநல்லிணக்கம், மதுவிலக்கு, பெண்சிசு, கல்விக் கொள்கை, மதிய உணவுத்திட்டம், வறுமை ஒழிப்பு, இயற்கைச் சீற்றம் உள்ளிட்ட சமூக சிந்தனைகள் நூலில் அதிகம். இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டி, மரபுக் கவிதை வடிவில்.

நன்றி: குமுதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *