கூடிவாழ்வோம்
கூடிவாழ்வோம், கண்ணன் கிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 223, விலை 150ரூ.
‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை ‘கலைக்கூடம்’ என்ற மூன்று பத்துமாடிக் கட்டிடங்களில் வசிக்கும் ஃபிளாட் வாசிகளை வைத்து சொல்லியிருப்பது புதிய உத்தி. ‘காவியம்’, ‘ஓவியம்’, ‘இலக்கியம்’ என்ற பெயர் கொண்ட அந்த குடியிருப்பு மனிதர்கள் கண்ணப்பன் முதல் பேத்தி தேவிகா, சாந்தா அம்மாள், சோமசுந்தரம், தாமரை, பார்வதி, ஆறுமுகம், சண்முகநாதன், குற்றாலிங்கம் என்று அத்தனை பேரும் நம் அக்கம் பக்கம் வாழும் நிஜ மனிதர்களின் வார்ப்புகள். ‘கலைக் கூடத்தை’ நிர்வகிப்பதில் எழும் சிக்கல்கள், அதை எளிதாக களைந்துவிடும் சூட்சுமங்கள், காதல், மோதல், சமாதானம் எல்லாமே அதில் உண்டு. ஒரு அபார்ட்மெண்ட்டில் வாழ்ந்த அனுபவம் நாவலைப் படிக்கும்போது எழுகிறது.
நன்றி: குமுதம்.